139. உத்தம தீர்க்கதரிசி, அன்பாக

1. உத்தம தீர்க்கதரிசி, அன்பாக
பரம கல்வியைக் கற்றுக் கொடும்;
பாவியை நேசிக்கும் போதகராக
வந்த நீர் என்னையுஞ் சேர்த்தருளும்.
சர்ப்பத் தலையை உடைத்த நீர்தாமே
பாவிக்கு உத்தம போதகராமே.

2. என் பிரதான ஆசாரியராக
உம்மைப் பணிந்து தியானிக்கிறேன்.
நித்திய மீட்பரே, நீர் எனக்காக
மாண்டதால் நீதிமானாக்கப்பட்டேன்;
வானத்திலே நீர் என் காரிய கர்த்தர்,
என்றைக்கும் என்னை நீர் காக்கச் சமர்த்தர்.

3. உன்னத அரசே; உம்மைத் துதித்து,
கீதங்களாலும் புகழுகிறோம்,
உம்மைச் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து,
உமது குகைளாயிருப்போம்.
உமது ஜனத்தைச் சகல நாளும்
காத்து விசாரித்து ராஜியம் ஆளும்.

4. என் முழு உள்ளமும் உம்மைக் கொண்டாடும்,
உமது நேசத்தைப் போற்றுகிறேன்;
எனது நாவும் நீர் செய்ததைப் பாடும்,
நானும் அல்லேலூயா, ஆமேன் என்பேன்.
ஜீவனுடையதெல்லாம் பணிவாக
ஜீவனின் கர்த்தரைப் போற்றுவதாக.

J. Neander,  †1680.