140. ஆடுகளின் உண்மையான

1. ஆடுகளின் உண்மையான
மேய்ப்பரே, இரங்குமேன்.
நானும் உம்மைச் சேர்ந்ததான
உமதாடாகட்டுமேன்;
ஆடுகளுக்காய் அன்பாலே
ஜீவனை நீர் தந்ததாலே
என்னையும் மீட்டீர் அல்லோ.
அந்த அன்புக் கொப்புண்டோ.

2. மந்தைக்கும் நல்மேய்பனுக்கும்
ஒன்றுக்கொன்று அன்புண்டே
அப்படி இங்கே இருக்கும்
என்மேல் நேசத்தை நீரே
வைக்கும்போது உம்மை நானும்
என் கர்த்தாவும், எஜமானும்
என்றுபற்றி உம்மையே
நேசிப்பேன், என் நேசரே.

3. தங்கள் மேய்ப்பனை நன்றாக
ஆடுகள் அறியுமே;
மேய்ப்பனும் மா திட்டமாகத்
தனது மந்தையிலே
எந்த ஆட்டையும் அறிந்து
காக்கும்போல், ஓனாய் திரிந்து
பீறப் பார்த்த என்னை நீர்
காத்துக் கொண்டிருக்கிறீர்.
 
4. மேய்ப்பன் காட்டுஞ் சத்தத்திற்கு
ஆடுகள் செவி தரும்;
ஆடு கூப்பிட்டால் அதற்கு
மேய்ப்பன் கவனிப்பதும்
உண்டல்லோ; நீர் சத்தமிட்டால்
கேட்பேன்; என்னை நீர் கண்டித்தால்
சீர் அடைவேன்; எனக்கும்
அன்பாய் நீர் செவிகொடும்.

5. ஆ, நான் கூப்பிட்டால் நீர் கேளும்.
உண்மையுள்ள மேய்ப்பரே;
மந்தையில் ஒவ்வொன்றின் மேலும்
மூர்க்கமான ஓனாய்க்கே
தப்ப, உம்மைக் கருத்தாக
நான் மன்றாடுவதற்காக
என்னை ஏவும், என்னை நீர்
அப்போ தாற்றித் தேற்றுவீர்.

6. எனதாவி உம்மைப் பற்றும்,
கர்த்தரான இயேசுவே,
வேண்டிக்கொண்டு தேடித்தட்டும்
என்னைத் தயவுடனே
நீர் கேட்டாதரிப்பீரென்றும்,
உம்மால் நான் சுகிப் பேனென்றும்,
இயேசுவே, நான் நம்பினேன்;
நம்பி ஆமேன் என்கிறேன்.

Sigmund v. Birken, †1681.