141. இயேசு கிறிஸ்துவே, உலகத்திலே

1. இயேசு கிறிஸ்துவே,
உலகத்திலே
கெட்டுப் போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே,
இயேசு கிறிஸ்துவே.

2. என்னை மீட்க நீர்
ஜீவனை  விட்டீர்,
குற்றத்தை எல்லாம் குலைக்க,
என்னைத் தீமைக்கு மறைக்க
எனக்காக நீர்
ஜீவனை விட்டீர்.

3. எங்கள் மீட்புக்கு
லோகத் தோற்றத்து
நாளின் முன்னே வார்த்தை தந்தீர்:
காலமாகையில் பிறந்தீர்:
பாவிகளுக்கு
மீட்புண்டாயிற்று.

4. வெற்றி வேந்தரே,
பாவஞ் சாபம் பேய்
நரகத்தையும் ஜெயித்தீர்.
நாங்கள் வாழ நீர் மரித்தீர்;
உம்மால் துஷ்டப் பேய்
வெல்லப்பட்டதே.

5. மா இராசாவே,
பணிவுடனே
தேவரீருக்குக் கீழ்ப்பட்டு,
உம்து மொழியைக் கற்று,
அதை நெஞ்சிலே
வைப்பேன், இயேசுவே.

6. தேவ ஆவியால்
தெளிவாங் கண்ணால்
உம்மை நோக்கி, உம்முடைய
நேசத்தாலே நான் நிறைய
வேண்டும் ஏனென்றால்
நான் நீர் கொண்ட ஆள்.

7. என்னை முழுதும்
உமக்குள்ளிழும்
நேசத்தால் நான் வாஞ்சையாக
உம்மோடொட்டிக்  கொள்வேனாக,
என்னை முழுதும்
உமக்குள்ளிழும்.

8. உம்மால் சாந்தமும்
மனத்தாழ்மையும்
என்னிலே உண்டாவதாக,
கோபமும் இடும்புஞ் சாக
உம்மை என்றைக்கும்
நான் பின்பற்றவும்.

9. லோக வாழ்வுக்குச்
சாயும் எனது
மனத்தை நீர் சீர்திருத்தும்,
நீர் என் வாழ்வும் நீர் என் முத்தும்;
லோகம் கேட்டுக்கு
நேராய்ப் போகுது.

10. சாத்தானானது
வைக்குங் கண்ணிக்குத்
தப்பி, மோட்சத்துக்குப்போகும்
பாதையில் ஓயாமல் நோக்கும்
கண்ணின் தெளிவு
தேவையானது.

11. நான் விழிக்கவும்,
நித்தம் நித்தமும்
கெஞ்சவும், நீரே அன்பாலே
உமது நல்லாவியாலே
என்னை நித்தமும்
ஏவியருளும்.

12. கொந்தளிப்பிலே
காரும், கர்த்தரே
படகை அலைகள் மோதி
மூடும்போது, புது ஜோதி
காண, கையையே
நீட்டும், கர்த்தரே.

13. ஆஸ்தி ஜீவனும்
சகலத்தையும்
உமக்காக நான் வெறுக்க
தைரியம் உண்டாயிருக்க,
என்னை மிகவும்
நீர் திடத்தவும்.

14. சாகும் வேளையில்
நீரே அண்டையில்
நின்று என்னை நீர் இருக்கும்
வாழ்வுக்குஞ் சந்தோஷத்துக்கும்
கொண்டுபோய், அங்கே
தேற்றும், இயேசுவே.


J.A. Freylinghausen,  † 1379.