143.ஞான பத்தாவே, பாவக்கேட்டிலே

1. ஞான பத்தாவே,
பாவக்கேட்டிலே
சாகும் என்னைத் தப்புவித்துச்
சேர்த்த உம்மை நான் துதித்து
போற்றவேண்டும்
ஞான பத்தாவே,

2. அன்பின் ரூபு நீர்,
என்னைத் தேவரீர்
அன்பாய்பார்த்தால் அதினாலே
என்னை மெய் மகிழ்ச்சியாலே
பூரிப்பாக்குவீர்,
அன்பின் ரூபு நீர்,

3. ஏற்ற மீட்பர் நீர்
கேட்டை நீக்கினீர்;
அதற்கென்றும்மில் தெய்வீக
ஸ்வாபத்தோடே மனுஷீக
ஸ்வாபத்தைச் சேர்த்தீர்,
ஏற்ற மீட்பர் நீர்.

4. உம்மை அண்டினேன்,
என்னைத் தேற்றுமேன்;
விசுவாசத்தின் திரிக்கு,
அது அவியாப்படிக்கு,
எண்ணெய் வாருமேன்,
உம்மை அண்டினேன்,

5. நீர் என் கன்மலை,
நேசப்பக்தியை
உம்மில் ஊன்றக் கெட்டியாக்கும்
இதே உம்மை நெஞ்சும் வாக்கும்
கேட்கும் கிருபை,
நீர் என் கன்மலை,

6. பலசாலியே,
நான் துன்னாளிலே
லோகத்தின் சதிக்குத் தப்ப,
என்னைப் பலமாய் நிரப்ப
வாரும் இயேசுவே,
பலசாலியே,

7. தேவனான நீர்
ஆக்கினையின் கீழ்
உம்மைத் தாழ்த்தி உத்தரித்து,
எங்கள் மீட்புக்காய்த் தவித்து,
தாகம் உண்டென்றீர்,
தேவனான நீர்

8. மத்தியஸ்தரே,
நீர் அந்நாளிலே
தேவரீரது பிராணம்
தந்து, கொண்ட சமாதானம்
வேண்டும், இயேசுவே,
மத்தியஸ்தரே,

9. பரம குணம்
வர உம்மிடம்
சேர்ந்து, லோகத்துக்குச் சேத்தோர்
வாழுவர்; சாகாதோர்கெட்டோர்.
எது பாக்கியம்,
பரதமகுணம்.

10. உம்மைப் பற்றினேன்,
என்றைக்கம் விடேன்,
உம்மை விசுவாசத்தாலே
நான் தரித்தேன், ஆகையாலே
லோகத்தை நாடேன்,
உம்மைப் பற்றினேன்.

11. துக்க நாளிலே
என்னை, இயேசுவே,
நீர் அனுபவித்த பாடும்
நோவும், பார்த்தன்பாய்க் காப்பாற்றும்,
ஆறுதல் நீரே
துக்க நாளிலே

12. தேறிப் பூரிக்கும்
வேளை இங்கேயும்
உமதன்பினால் கிடைக்கும்
அங்கோ உம்மண்டை என்றைக்கும்
ஆவி தேகமும்
தேறிப் பூரிக்கும்

13. இங்கேதான் நிந்தை,
அங்கே மகிமை,
இங்கிருளில் விசுவாசம்,
அங்கே பூரண ப்ரகாசம்;
அங்கே மகிமை,
இங்கேதான் நிந்தை,

14. வெல்ல நீர் துணை,
நீரே லோகத்தை
வென்றீர், ஆனபடியாலே
பொறுமையுடன் உம்மாலே
நானும் லோகத்தை
வெல்ல நீர் துணை.

15. என் கிரீடமே,
ஸ்வாமி, என்னிலே
உமக்குப் புகழ்ச்சியாக
யாவுஞ் சீர்ப்படுவதாக;
ஆமேன்,இயேசுவே.
என் கிரீடமே.

Adam Drese,  † 1701.