144. கதிக்கெல்லாம் மேலான கதியாம்

1. கதிக்கெல்லாம் மேலான
கதியாம் இயேசுவே,
ஒப்பற்ற அந்தமான
பத்தாவே, உமக்கே
என் நெஞ்சை வாஞ்சையாலே
ஒப்புக் கொடுக்கிறேன்;
ஏன், உமது நோவாலே
ஆரோக்கியமானேன்.

2. நீர் என் முசிப்பை ஆற்றி,
மன இடுக்கத்தைச்
சந்தோஷமாக மாற்றி,
துக்கிக்கும் மனத்தைத்
திடத்துவதற்கான
இம்மானுவேலாமே.
நீர் இயேசு, நீர் மெய்யான
பரத்தின் மன்னாவே

3. ஆ, உமது குளிர்ந்த
முகத்தைக் காண்பியும்,
என் மனத்தில் மிகுந்த
அன்பாய் ஒளிவிடும்
நீர் என்னண்மை தரித்தால்
வாழ்வேன் என் ஜீவனே;
அடியானை நீர் விட்டால்,
வாழ்வொன்றும் இல்லையே.

4. இப்பள்ளத்தில் என்னோடே
இரும், என் இயேசுவே,
தலைவராம் உம்மோடே
நல் மனத்துடனே
அனைத்தையும் சகித்து
வருகிறேன்; இதோ,
நோவென்னை உம்மை விட்டு
பிரிக்க்க் கூடுமோ.

5. இதோ, பிழைக்கச் சாக
என் நெஞ்சம் உமக்குக்
கொடுத்திருப்பதாக;
நீரே என் பூரிப்பு
இங்கும்மை அன்றி வாழும்
களிப்பைப் பார்க்க நான்
உம்மோடடையும் பாடும்
இக்கட்டும் மேன்மைதான்.

6. மண் மகிமையை யாவும்
வெறுப்பாய்ப் பார்க்கிறேன்;
என் ஆவி உம்மைத் தாவும்;
பரத்தை நோக்குவேன்;
என் இயேசுவே, நீர் தாமே;
என் செல்வமானவர்.
உம்மால் மெய்வாழ்வுண்டாமே
மண் வாழ்வெல்லாம் பதர்.

7. என் பொழுதே, உதியும்;
ஆ, என்னை உம்மண்டை
அழைக்கத் தீவிரியும்.
நான் இந்த லோகத்தைச்
சந்தோஷமாக விட்டுப்
போவேன், என் ஜீவனே,
உம்மண்டையில் சுகித்து
இருப்பேன், கர்த்தரே.

Sal. Liscow.  † 1689.