1. இயேசு ஸ்வாமியை விடேன்,
தம்மைத் தந்தார் எனக்காக,
அவருடன் அடியேன்
என்றும் ஒட்டிக் கொள்வேனாக;
அவரால் பிழைக்கிறேன்;
இயேசு ஸ்வாமியை விடேன்.
2. என்றும் அவரை விடேன்,
உயிரோடிருக்கும் மட்டும்
அவருக்குப் பின் செல்வேன்,
பட்சமாய் என்னை நடத்தும்
அவர் கையைப் பற்றுவேன்
இயேசு ஸ்வாமியை விடேன்.
3. பார்வை, கேள்வி, பரிசம்,
புத்தி, பலம் போனாலும்,
நொவு கண்டு மரணம்
அடியேனுக்கு வந்தாலும்,
ஒன்றுக்கும் பயப்படேன்;
இயேசு ஸ்வாமியை விடேன்.
4. நான் பரத்துக் கேறுவேன்,
அங்கே கர்த்தரைத் துதிக்கம்
கூட்டத்தை நான் சேருவேன்.
அவர் சந்நிதியில் நிற்கும்
இன்பத்தை உணருவேன்;
இயேசு ஸ்வாமியை விடேன்.
5. வேறே இன்பத்தை நாடேன்;
என்னை மா இரக்கமாக
மீட்டவரை நேசிப்பேன்,
நெஞ்சைப் பரவசமாகச்
செய்வார், நான் துக்கிப்பானேன்
இயேசு ஸ்வாமியை விடேன்.
6. இயேசு ஸ்வாமியை விடேன்,
நித்தம் அவர் பக்கமாகச்
சென்று தாழ்ச்சி அடையேன்,
காப்பார் நல்ல மேய்ப்பராக;
யாவருக்கும் சொல்லுவேன்;
‘இயேசு ஸ்வாமியை விடேன்.’
Christian Keymann, † 1662.