1. நான் உம்மை முழுமனத்தாலும்
சிநேகிப்பேன், என் இயேசுவே;
நான் உம்மை நித்தம் வாஞ்சையாலே
பின் செல்லுவேன், என் ஜீவனே;
குலை துடிக்குமட்டும் நீர்
என் நெஞ்சில் தங்குவீர்.
2. நான் உம்மைநேசிப்பேன், நீர் தாமே
என் உத்தமசிநேகிதர்;
நீர்தேவ ஆட்டுக்குட்டியாமே.
நீர் என் பத்தாவுமானவர்.
நான் என்றும் உம்மை நேசிப்பேன்,
தினமும்போற்றுவேன்.
3. ஆ, அழகே, என் மீட்புக்காக
உதித்த தேவ மைந்தனே,
நான் உம்மை இத்தனை நாளாக
அறிந்த்தில்லை என்பதே,
இப்போதென் முழு மனத்தை
வருத்தும் வேதனை.
4. நான் உம்மைத்தேடவாஞ்சையற்று,
கண்கெட்டோனாய் சிதறினேன்
நாம் உம்மைவிட்டுத் தூரப்பட்டு
இவ்வுலகத்தை நேசித்தேன்;
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர் செய்த தயவு.
5. நீர் என்னை தெய்வஜோதியாலே
ப்ரகாசிப்பித்தடியேனைக்
குணப்படுத்திப் பூரிப்பாலே
நிரப்பி, என்மேல் தயவை
விரித்தீர், அதன் நிமித்தம்
உமக்குத் தோத்திரம்.
6. இனி நான் சிதறிப்போகாமல்
நேராகபோய் சன்மார்க்கமாய்
என் கால்களாலே இடறாமல்
நடக்க நீர் ஒத்தாசையாய்
இருந்து, என்னை முழுதும்
திருப்பியருளும்.
7. என் கண்கள் இன்பமாய்க் கண்ணீரை
உதிர்க்கவும், எந்நேரமும்
என் மனவாஞ்சைதேவரீரைச்
சிநேகத்தாலே தாவவும்,
நீர் என்னை அன்பாய் நித்தமே
எழுப்பும், இயேசுவே.
8. நான் உம்மை ஜீவனுள்ள நாளும்
சிநேகிப்பேன், என் கர்த்தரே;
நான் உம்மை அவதி வந்தாலும்
சிநேகிப்பேன், என் இயேசுவே
குலை துடிக்குமட்டும் நீர்
என் நெஞ்சில் தங்குவீர்.
J. Scheffler, † 1677.