1. இயேசு, உமக்குள்ளிருக்கும்
அன்பென் ஆவியை இழுக்கம்,
லோக நேசம் எனக்கு
அத்தால் சாரமற்றது.
உமதுண்மையே காப்பாற்றும்,
உமதின்பம் என்னை ஆற்றும்,
இங்கே தங்குமட்டுக்கும்
நீர் என் வாழ்வும் லாபமும்.
2. நீரே என் முத்தென்று சொல்வேன்.
உம்மையே தெரிந்துகொள்வேன்
உம்மால் நேசிக்கப்பட்டேன்
உம்மை நானும் நேசிப்பேன்;
உம்மை நான் நமஸ்கரித்து,
உமதைக்யத்தில் தரித்து,
தேவரீரை நோக்குவேன்,
மாய்கையை அரோசிப்பேன்.
3. மனிதருடைய நேசம்
கொஞ்ச உண்மை மா சந்தேகம்
அதன் இன்பம் மா சொற்பம்,
துன்பம் பரிபூரணம்,
பூவறுப்பதற்கு வைக்கும்
காலில் நாலு முள்ளு தைக்கும்,
மகிமையின் ஓர் துளி
துக்கமாகிற நதி.
4. ஆகிலும் உமது நேசம்
பாக்கியத்துக்குள் ப்ரவேசம்;
போகப் போக, பின்னையும்
அதன் இன்பம் பெருகும்.
தேவரீருடன் சாவாசம்
பண்ணும் ஓர்நாள் அப்பியாசம்
லோக வாழ்வின் ஆயிரம்
நாளைப்பார்க்கிலும் நலம்.
5. இன்னும் என்னை இங்கே வைத்தும்,
அங்கே என்னை நீர் அழைத்தும்,
நேசரே எந்நேரமும்
சகல இடத்திலும்
நான் நீர் சேர்த்த ஆத்துமாவும்
நீர் நான் பற்றின பத்தாவும்
என்றது விளங்கவே,
நீர் சகாயர், கர்த்தரே.
J. Neander, † 1680.