148. நீர் என் மகிழ்ச்சி கர்த்தரே

1. நீர் என் மகிழ்ச்சி கர்த்தரே
மிகுந்த தயவுடனே
என்னண்டையில் தரியும்
விண்மண்ணிலும் ஏதேதுண்டோ
அதும்மை அன்றித்தேற்றுமோ,
நீர் தேற்றரவளியும்.
என் நெஞ்சு மாண்டு போயினும்,
நீர் என் கதியுஞ் ஜீவனும்
என் கன்மலையுமானவர்,
நீர் என்னை மீட்ட ரட்சகர்.
ஆ,இயேசுவே, தயாபரா தயாபரா
நீர் என்னைத்தேற்றியருள.

2. என் தேகம் ஆத்துமத்தையும்
எனக்குண்டான யாவையும்
நீர் தந்தீர், தயவாக;
இதெல்லாம் உமக்கேற்றதாய்,
பிறருக் கூழியமுமாய்
அனுபவிப்பேனாக;
பிசாசின் எத்தும் மூர்க்கமும்
விலகப் பண்ணியருளும்
உபத்ரவத்தில் உம்மையே
பின்பற்றப்பண்ணும் இயேசுவே
ஆ, இயேசுவே, சாவணுகும் இக்கட்டிலும்
நீர் என்னைத் தேற்றிக்கொண்டிரும்.

3. என் ஆத்துமத்தை உம்மண்டை
எடுத்துவரத் தூதரை
அப்போ தன்பாய் அனுப்பும்;
என் தேகம் தன் படுக்கையில்
தூங்கட்டும், நீர் வருகையில்
நீரே அதை எழுப்பும்;
அப்போ நான் உம்மைக் கர்த்தரே,
மகா சந்தோஷத்துடனே
பிழைக்கக் கட்டளையிடும்.
ஆ, இயேசுவே, இம்மீட்பெல்லாம் உம்மாலேயாம்
புகழ்ச்சி உமக்கே உண்டாம்.

Martin Schalling,  † 1608.