151. ஆத்துமாவே, கஷ்டத்தால்

1. ஆத்துமாவே, கஷ்டத்தால்
நீ இளைத்துப் போவதேது.
லோகத்தின் சிற்றின்பத்தால்
உனக்காகிற வாழ்வேது
இயேசுவண்டை சேர்ந்து வா;
மற்றதெல்லாம் விருதா.

2. சிதறும் உம் மனத்தைப்
பரங்களுக்கேறெடுத்து
முழுவதும் நீ அதைத்
தெய்வ தயைக்கட்படுத்து
இயேசுவண்டை சேர்ந்து வா
மற்றதெல்லாம் விருதா.

3. துக்கமுள்ள நெஞ்சுக்கு
எங்கே ஆறுதல் கிடைக்கும்
நேராய் ஜீவ ஊற்றுக்கு
வந்து தாகம் தீர் என்றைக்கும்
இயேசுவண்டை சேர்ந்து வா
மற்றதெல்லாம் விருதா.

4. பக்தியாய் உன் பாதையை
விலக்காமல் நேலே செல்லு;
கர்த்தர் காப்பார், சோதனை
கண்டும் அவராலே வெல்லு;
இயேசுவண்டை சேர்ந்து வா
மற்றதெல்லாம் விருதா.

5. அடிக்கடி ஆவியில்
நீ பரத்துக்கு மேலாக
ஏறி அங்கே மோட்சத்தில்
என்றும் பரவசமாக,
இயேசுவண்டை சேர்ந்து வா
மற்றதெல்லாம் விருதா.

6. ரட்சகரின் மகிமை
விசுவாசக் கண்ணால் பார்த்து,
ஜெபத்தின் நற்றைலத்தை
அவர் சந்நிதியில் வார்த்து,
இயேசுவண்டை சேர்ந்து வா
மற்றதெல்லாம் விருதா.

7. திடன் கொண்ட்டர்ந்திரு,
லெக்கை நீயடைந்து வாழ்வாய்;
வாஞ்சிக்கும் உன் மனது
பூரிக்க ரட்சிப்பைக் காண்பாய்;
இயேசுவண்டை சேர்ந்து வா
மற்றதெல்லாம் விருதா.

Jacob Gabriel Wolf. † 1754.