152. மகா அருளின் ஜோதியை

1. மகா அருளின் ஜோதியை
வீசிடும் வெள்ளி எத்துணைப்
ப்ரகாசமாய் விளங்கும்
தாவீதின்மைந்தன், இயேசுவே,
நீர், நீர் என் மணவாளனே,
என் பொக்கிஷம் என் பங்கும்
முற்றும்,
சுற்றும்,
தயவாலும் உண்மையாலும் நீர் நிறைந்தோர்,
மேன்மை நாமமும் அடைந்தோர்.

2. என் முத்தே, என் கிரீடமே,
உம்மோடே, தேவபிள்ளையே,
நான் ஐக்கியமாக வேண்டும்
உயர்ந்த ராஜா, உமது
நற்சுவிவேஷம்  எனக்கு
அமிர்தம் பாலும் தேனும்
ஐயா,
துய்யா,
தெய்வ ரூபே, வாடாப்பூவே, நீரே யாவும்.
ஜீவ ஊற்றும் மெய்மன்னாவும்.

3. என் கெம்பே, வானயஸ்பியே,
மினுங்கி நிற்கும் நேசமே,
என் நெஞ்சில் ஒளி தாரும்,
நான் உமக்குள்ளே என்றைக்கும்
நிலைக்க, நீர் எந்நேரமும்
அன்பாக என்னைப்பாரும்,
ஆன,
ஞான,
செல்வம் நீரே, தேவரீரே நான் அறியும்
வாழ்வும் இன்பமும் கதியும்.

4. சிநேகமுள்ள பார்வையால்
அடியேனை நீர் நோக்கினால்,
பரம் வெளிச்சங் காட்டும்;
நீர் சொல்லும் இன்பச் சொற்களும்
தருஞ் சரீரம் ரத்தமும்
தேற,
சேர,
கிட்டும் என்னை நற்றிடனைத் தந்தழையும்
அன்புமாய் அரவணையும்.

5. பிதாவே, நீர் அனாதியில்
என் பேரிலே குமாரனில்;
சிநேகம் வைத்த கர்த்தா;
குமாரன் என்னைத் தமக்கே
மனைவி என்றன்புடனே
தெரிந்து கொண்ட பர்த்தா
மெத்த,
கெட்ட,
பாவியான என்னை வானக் கர்த்தர் தாமே
நோக்கின திரக்கமாமே.

6. கிண்ணாரம், யாழும், வீணையும்
சங்கீத வாத்தியங்களும்
களிப்பாய் முழங்கட்டும்.
அன்புள்ள இயேசுவுடனே
நான் என்றென்றைக்கும் வாழ்வதே
என் ஆவியைத் திடத்தும்.
ஆடி,
பாடி,
கிறிஸ்து தாமே ராஜாவாமே என்றும் ஓதும்
சந்தம் இன்பமே எப்போதும்.

7. மகிழ்வேன், என் சிநேகிதர்
அல்பா ஓமேகா என்பவர்,
என் நேசர் ஆதியந்தம்
இனி மோட்சானந்த்த்திலே
நான் அவரோடு சேர்வேனே.
என் பாக்கியம் அனந்தம்
ஆமேன்,
ஆமேன்,
வா, ரட்சிப்போ, வா, கெலிப்பே உனக்காக
வாஞ்சையானேன், சேர்வாயாக.

Phillpp Nicolai, † 1608.