157. ஆ, பாவிகளின் மீட்பரான

1. ஆ, பாவிகளின் மீட்பரான
என் இயேசுவே, நீர் என்னையும்
உம்மில் விளங்கும் இன்பமான
அன்பாலே தேற்றியருளும்.
நர தயாபரா, நீர் வாரும்,
இப்வேழையை அன்பாகப் பாரும்

2. நீர் அற்புத்த்தைச் செய்யுங்கர்த்தர்
எல்லாரையும் எக்கேட்டுக்கும்
நீர் நீங்கலாக்க மா சமர்த்தர்
ரட்சிப்பெல்லாம் உம்மால் வரும்
நீர் மா அன்புள்ளவருமாமே,
நரரின் ஆறுதல் நீர்தாமே.

3. உம்மாலே கண் குருடருக்கும்
செவியைச் செவிடருக்கும்,
பெலன் கால் நொண்டியானோருக்கும்,
குஷ்டமுள்ளோர்க்குச் சுத்தமும்,
செத்தோருக்குயிரும் உண்டாமே,
நீர் ஏழைகளின் மீட்பராமே.

4. நரரது சரீரத்துக்கு
அப்போ நீர் செய்த தயவு
அடியார் ஆத்துமங்களுக்கு
நீர் செய்யச் சித்தமானது
ஏதென்று வெகு தெளிவாகக்
காண்பிக்குமே மா அன்புமாக.

5. நீர் ஜோதியைத் தந்தாலொழிய
நான் ஞானக் காரியங்களைத்
தகுதியாய் உணர்ந்தறிய
கண் எனக்கில்லை என்பதை
நீர் பரிவன்புடனே பாரும்,
வெளிச்சத்தை எனக்குத் தாரும்.

6. நான் உமது வார்த்தைகளுக்கு
நன்றாய்ச் செவி கொடுக்க நீர்
இரங்கி வந்தடியேனுக்குச்
சகாயம் பண்ணக் கடவீர்;
உமக்கென்றைக்குங் கீழ்ப்படியும்
இதயமும் எனக்களியும்.

7. நான் நொண்டிக்காலனாகையாலே
இங்கங் கிடறுகிறேனே;
ஆ, தேவரீரின் பிறகாலே
இனி இடறலின்றியே
அடியேன் வருவதற்காக
நீர் பலத்தை அளிப்பீராக.

8. என் குஷ்டரோகம் யாரால் நீங்கும்
எல்லா வியாதிகளிலும்
மகா கேடான இந்த்த் தீங்கும்
இருக்குமே; ஆ, அதையும்
அன்புள்ள பரிகாரியாக
நீர் நீக்கியருளுவீராக.

9. என்னில் நான் செத்தோன் என்னில் யாவும்
நல்வேலைக்கு ஆகாததாம்;
ஆ, இந்த என்னுடைய சாவும்
பலத்த தேவ மைந்தனாம்
உம்மாலே ஜீவனாக மாறும்
படிக்கு, என்னை அன்பாய்ப் பாரும்.

10. நான் சுய நீரி ஒன்றுமற்ற
தரித்திரன்; ஆ, உமது
நற்சுவிசேஷத்தின் பலத்த
மகிழ்ச்சி அடியேனுக்கு
ரட்சிப்பும் நீதியும் உண்மாக,
என் இயேசுவே பலிப்பதாக.

L.A. Gotter. † 1735.