1. குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே,
நீ இயேசுவண்டை போ,
வேறு யாராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ.
2. சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே;
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்,
இவர்நிமித்தமே
பிதா இரங்கினார்.
3. உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால்
நீ இயேசு வண்டை சேரு;
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ,
வழிகாட்டுபவர்
தெய்வாவி அல்லவோ.
4. அன்புள்ள கர்த்தரே,
அநேகப் பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக் காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே,
என் தாகந்தருமேன்.
5. மனத் தரித்திர்ர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்;
ஆ, என்னை ரட்சியும்.
6. என் தவனத்துக்கு
அச்சீவனின் தண்ணீரை
அளியும், கர்த்தரே;
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்ச்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம்
என்மேல் வரட்டுமேன்.
Ch. Knorr V. Rosenroth † 1689.