1. ஆகாதவனின் சாவை நாம்
விரும்போம், அவன் பாவமா
வழியை விட்டு நம்மண்டை
மனந்திரும்பி வாழ்வதை
விரும்புவோம் என்றாண்டவர்
மா ஆணையோடே சொன்னவர்.
2. மனிதனே, இவ்வார்த்தையை
உன் மனத்தாபத்தில் நினை;
அமிழாதே, இங்குனக்கே
நல்லாறுதல் கிடைக்குமே;
நொறுங்குண்டோரை ஸ்வாமி யார்
அன்பாகப்பார்ப்போம் என்கிறார்.
3. ஆனாலும் உன் நினைவிலே
நீ நிர்விசாரனாகாதே;
நெடுநாள் இருக்கின்றது,
நான் இங்கே நன்றாய்ப் பூரித்து
இருந்தும், கடைசியிலே
மன்னிப்படைவேன் என்காதே.
4. மெய்தான், கர்த்தாவின் தயவு
பெரியதாக உள்ளது;
இதோ, விசாரமின்றியே
அந்த நினைவின்பேரிலே
பொல்லாப்புச் செய்யும் மனிதன்
கோபாக்கினைக் குள்ளானவன்.
5. சுதனுக்காகத் தயவு
நாம் செய்வோம் என்றோர் உன்க்கு;
“நீ சாவாய் உயிருடனே
இருப்பாய்” என்றதில்லையே;
நீ சாவாய் என்ற்றிகிறாய்,
எப்போதோ என்றறிந்திராய்.
6. இப்போ குணப்படு; இப்போ,
ஆங்காலம்; நாளை என்னவோ;
இப்போ சுகித்தோரில் சிலர்
ஓர் வாரம் போனால் போனவர்;
ஐயோ குணப்படாதோனாய்
நீ செத்தால், வாதைக்குள்ளாவாய்.
7. ஆ, இயேசு ஸ்வாமி, மரணம்
அணுகுமுன்னே சீக்கிரம்
நான் உம்மண்டைக்குச் சேரநீர்
சகாயம் பண்ணக்கடவீர்;
நான் சாவுக்கின்றும் என்றைக்கும்,
ஆயத்தமாயிருக்கவும்.
Joh. Heermann, † 1647.