1. ஆ, கர்த்தரே,
பொல்லாப்பிலே
அமிழ்ந்த பாவியானேன்;
இங்கோவெனில்
இவ்வுலகில்
சகாயம் எங்குங் காணேன்.
2. நால் திக்கிலும்
மா தூரமும்
போனாலும், என் அழுக்கும்
என் க்லேசமும்
யாராலேயும்
நீங்காத தாயிருக்கும்.
3. தள்ளுண்க நான்
ஏந்நவன் தான்,
என் கையோ கிறிஸ்தைப் பற்றும்
தயாபரா,
என் ஆண்டவா
நான் அவரால் தப்பட்டும்.
4. அதிபதி,
கோபாக்கினி
நியாயமாய் எரியும்;
ஸ்வாமி, அங்கே
நான் வாழவே
இம்மையிலே அடியும்.
5. தகப்பனே,
என் நோவிலே
நான் பிள்ளைபோல் அடங்கும்
குணத்தையே
என் நெஞ்சிலே
நீர் தந்தென்மேல் இரங்கும்.
6. இங்கே எல்லாம்
நீர் உமக்காம்
பிரிய சித்தமாக
நடப்பியும்,
தண்டித்திரும்,
அங்கென்னைத் தள்ளீராக.
7. புயலிலும்
மா மப்பிலும்
சிஷ்டி எல்லாம் மூடுண்கும்
போதெப்படி
ஓர் குருவி
ஓர் பொந்துக்குள் ஒதுங்கும்.
8. அத்தன்மையே,
என் இயேசுவே,
என்மேல் எப்பயம் வந்தும்
நான் உம்மிலே
ஒதுங்குவே,
என் மனமும்மை அண்டும்.
9. என் தேகமும்
என் ஆவியும்
பிரிந்தும், உம்மில் நிற்பேன்.
அப்போ வரும்
கதியையும்
உம்மோடனுபவிப்பேன்.
10. த்ரியேகரே
என் ஸ்வாமியே,
நான் நம்பினோர் நீர்தாமே;
உம்மில் திடன்
உடையவன்
பிழைப்பது மெய்யாமே.
M. Rutillus. † 1618.
7-10 J. Major, †1654.