164. ஆ, இயேசுவே, இப்பூமியில்

1. ஆ, இயேசுவே, இப்பூமியில்
என் தேற்றரவு நீரே,
என் நம்பிக்கை நீர், ஏனெனில்
என் மீட்பர் தேவரீரே.
ஓர்க்காலும் யாரும் என் மன
இக்கட்டைத் தீர்த்துநீக்காரே;
என் இயேசுவே,
நான் பற்றும் ரட்சகர் நீரே.

2. என் பாவங்களின் பாரத்தால்
என் மனது கலங்கும்;
நீர் பாடுபட்டு மாண்டதால்
ரட்சித் தென்மேல் இரங்கும்.
பிதாவிடத்தில் இப்போதும்
என் மத்தியஸ்தராயிரும்,
அப்போ நான் நீங்கலாகிறேன்.
காப்பாற்றுமேன்,
நான் தேவரீரை நம்பினேன்.

3. மெய்யான விசுவாசத்தை
இரக்கமாய் அளியும்,
என் கண்ணைத் தெய்வ தயவை
நான் பார்க்கத் தெளிவியும்,
நான் உம்மை முழு நெஞ்சாலும்
பிறரை என்னைப் போலவும்
நேசிப்பேனாக; சாவிலே
என்னிடம் பேய்
சேராதே காரும், இயேசுவே.

4. த்ரியேக ஸ்வாமிக்குத் துதி
உண்டாயிருப்பதாக;
தெய்வீக சித்த்ததின்படி
நடக்கிறதற்காக,
பிதாவுடைய தயவும்
குமாரனின் நிநேகமும்
தேவாவியின் துணையுமே
என்னுடனே
இருப்பதாக நித்தமே.

Jon. Schnessing, † 1567.