163. அருளின் ஊற்றாம் இயேசுவே

1. அருளின் ஊற்றாம் இயேசுவே,
வியாகுலமும் பாடும்
படுகிற என் நெஞ்சிலே
இருக்கும் நோவைப் பாரும்.
அநேகம் அம்பு தைத்ததாய்
என் பாவங்கள் அகோரமாய்
என் மனத்தை வதைக்கும்.

2. மரத்தில் சாவின் வாதையாய்
நீர் பட்ட நோவைப்பாரும்,
என் நோவை நீக்கி, தயவாய்
ரட்சிப்பளிக்க வாரும்.
நான் துக்கத்தோடே கொடிய
இக்கட்டிலே மடிகிற
நிர்ப்பந்தத்தை விலக்கும்.

3. என் நாட்களில் நான் பண்ணின
பொல்லாப்பென் ஞாபகத்தில்
வந்தால், கற்பாரமாகிய
பயம் என் ஆத்துமத்தில்
உண்டாம், நீர் சொன்னவார்த்தையால்
நல் ஆறுதல் இல்லாவிட்டால்,
என் நோவில் கெட்டுப்போவேன்.

4. நொறுங்கின நெஞ்சுடனே
வந்தும்மைப் பற்றிக்கொள்ளும்
எல்லார்க்கும் தாழ்ச்சியின்றியே
அருள் உண்டென்றுசொல்லும்
உமது திருவார்த்தையோ
நெஞ்சைத் தன் இன்பத்தால் அல்லோ
திரும்ப உயிர்ப்பிக்கும்.

5. இப்போதும் என் தனச்சாட்சியாலே
வதைந்த நான் உம்முடைய
தெய்வீக ரத்தத்தாலே
மன்னிப்படைய ஆவலாய்
உம்மண்டை வந்து, பணிவாய்
குனியும் ஏழைப் பாவி.

6. “புவியில் சிறு வயதைத்
துவக்கி இதுமட்டும்
நான் செய்த அக்ரமங்களை
அன்பாய் மன்னித் தகற்றும்”
என்றும்மை என் இக்கட்டிலே
சாஷ்டாங்கப் பணிவுடனே
விண்ணப்பம் பண்ணச் சேர்ந்தேன்.

7. ஆ, ஸ்வாமி, நான் பிழைத்தினி
கீழ்ப்பட்ட பிள்ளையாக
நீர் மகிமைப்படும்படி
நடக்கிறதற்காக
நீர் உம்முடைய தயவின்
படி மன்னித்து பாவத்தின்
நுகத்தடியை நீக்கும்.

8. மகிழ்ச்சியுள்ள ஆவியால்
இவ்வேழையைக் காப்பாற்றும்.
நீர் பாடுபட்டு மாண்டதால்
என் சாவில் என்னை ஆற்றும்;
என் நெஞ்சில் விசுவாசத்தை
முடியக் காத்தடியேனை
உம்மிடம் சேர்த்துக் கொள்ளும்.


Barth. Ringwaldt, † 1598.