169. நான் வாஞ்சையாய் மேலானதைச்

1. நான் வாஞ்சையாய் மேலானதைச்
சித்தித்துக்கொண்டு, பாவத்தை
பகைக்க, தூய நெஞ்சை நீர்
என்னில் சிஷ்டிக்கக் கடவீர்.

2. என்னில் பேயால் பாழானதை
நீர் புதிதாக்கி, மனத்தை
வெல்லப்படாத கெட்டு
பலமுமாக்கி யருளும்.

3. இச்சையின் மோசம் என்னிலே
செய்த பொல்லாப்பைக் கண்டீரே
என் நெஞ்சு துயரப்படும்
ஆ, கோபமாயிராதேயும்.

4. ஆ, உம்முடைய ஆவியை
நீர் உமது அடியேனை
விட்டெடுக்காமல், யாவையும்
இரக்கமாய் மன்னிக்கவும்.

5. அவர் திரும்ப எனக்குத்
திடன் அளித்து, உமது
முகத்தின் ஆறுதலையும்
அடியேனுக்குத் தரவும்.

6. மனக் கலக்கமற்றோனாய்
நான் உமக்கேற்ற பக்தியாய்
இருந்து, நித்த நித்தமும்
சன்மார்க்கமாய் நடக்கவும்.

7. பிதா குமாரன் ஆவியே,
இரக்கமுள்ள கர்த்தரே,
உமக்கெள்றைக்கும் அடியேன்
தோத்திரமே செலுத்துவேன்.