1. ரட்சிப்புச் சுத்த தயவால்
உண்டான தெய்வ தத்தம்;
அது நாம் செய்த தர்மத்தால்
வரும் என்பதவத்தம்;
பூலோகத்தின் கடன்களைச்
செலுத்தித் தீர்த்த இயேசுவை
அண்ணாந்து பார்க்கவேண்டும்.
2. தெய்வீகக் கட்டளைகளை
நாம் கைக்கொள்ளாதே விட்டு,
துர் ஸ்வாபத்தால் ஆகாததை
கர்த்தாவைக் கோபமாக்கினோம்.
நிர்பந்த்த்தைச் சம்பாதித்தோம்,
சீர்கேடு பெருகிற்று.
3. ஆனாலுங் கட்டளையை நாம்
சுய பலத்தினாலே
கைக்கொண்டு நீதியாகலாம்
என்றந்தகாரத்திலே
நினைத்தோம்; நமக்கதுவோ
பொல்லாக் குணங்களை இப்போ
காண்பிக்கிற கண்ணாடி.
4. இத்துர்க்குணங்களை விடப்
பார்த்தாலும், அவை நிற்கும்
பொல்லாப்பு பின்னையும் மகா
அதிகமாய் விர்த்திக்கும்
நம்மால் ஆகாது கெட்டோமே
நாம் மாயஞ்செய்தும் அதுவே
முழுவதுஞ் செல்லாது.
5. ஞாய ப்ரமாணமோ வென்றால்
நிறைவேற்றப் படாமல்
போனால், நாம் சாவோம்; ஆகையால்
பிதா அளவில்லாமல்
இரங்கும் அன்பால் கிறிஸ்துவைக்
கொடுத்தார், இவர் கடனை
எல்லாஞ் செலுத்தித் தீர்த்தார்.
6. இதவராலே ஆனபின்
அவர் முன்பாகத் தாழ்ந்து
ஆ, இயேசுவே, நீர்
பலனினால் நான் வ
சுகிப்பேனாக, ஏனெனில்
நீர் உம்முடைய ஜீவ
இப்பாதகனை மீட்டீர்.
7. நாம் கெட்டுப் போனதையெல்லாம்
ரட்சிக்க வந்தோம் என்றும்
சேர்ந்தோனுக்கு மன்னிப்புண்டாக
வா, வா, நாம் இயேசு என்று
நீர் சொன்னீரே என்றவரை
நாம் பற்றிக் கொள்ளும் நம்பிக்கை
இரட்சிப்புக்குள்ளாக்கும்.
8. இத்தாலே ஸ்வாமிக்கு முன்பாய்
நாம் நீதிமான்களாகி,
புதிய சிஷ்டிகளுமாய்த்
திருப்பப்பட்டோராகி,
சன்மார்க்கமாய் நடக்கிறோம்,
கர்த்தாவின் அன்பை அறிவோம்
பிறர்க்கும் நன்மை செய்வோம்.
9. ஞாய ப்ரமாணம் ஸ்வாமியின்
கோபாக்கினையைக் காட்டும்;
திரும்பச் சுவிசேஷத்தின்
ப்ரசங்கம் நெஞ்சை ஆற்றும்.
“நீ இயேசுவண்டை ஓடிவா
ஞாய ப்ரமாணங் கேட்கிற
கடனைத் தீர்த்தார்” என்கும்.
10. நாம் இவர்க்குள்ளானால் அப்போ
இவ்விசுவாசம் நல்ல
கனிதரும்; தராததோ
மெய் விசுவாசம் அல்ல;
நாம் விசுவாசிகளானால்,
நாம் நீதியர்; இதோவென்றால்
சன்மார்க்கத்தால் விளங்கும்.
11. மெய் விசுவாசம் ஸ்வாமிக்கு
இக்கட்டில் சார்ந்திருக்கும்,
ஜெய நாளைக் குறிப்பது
அவருக்கே அடுக்கும்
ஓத்தாசையைத் தயாபரர்
குறித்த நாளில் செய்பவர்,
சந்தேகம் ஒன்றும் வேண்டாம்.
12. கேளார், ரட்சியார் என்ற தாய்க்
கண்டும் பயப்படாதே;
தயையைச் சில காலமாய்
ஒளிப்பார் பின்வாங்காதே;
உன் நெஞ்சின் அனுமானத்தை
கேளாமல், தேய்வ வார்த்தையை
நீ திடனாக நம்பு
13. கர்த்தாவே, உமதன்புக்குத்
துதியுண்டாவதாக;
அடியார் விசுவாசித்துப்
பிழைக்கும் படியாக
இங்கும்முடைய உன்னத
நன்னாமம் மகிமைப்பட,
பரம ராஙஜயம் வர.
14. ஆ, உம்முடைய சித்தமே
செய்யப்படுவதாக,
தினமும் அப்பம் தாருமே,
கடன்களை அன்பாக
மன்னித்துச் சோதனைகளை
விலக்கிப் போட்டுத் தீமையை
விலக்கிவிடும், ஆமேன்.
P. Speratus, † 1551.