1. இயேசு பாவி நேசர்தாம்,
வழிதப்பிப்போன யாரும்
அவரால் திரும்பலாம்,
அவரால் எக்கேடும் மாறும்.
அவரால் ரட்சிப்புண்டாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
2. நாம் மகா அபாத்திர்ர்,
அவர் கிருபை புரிந்தோர்,
ரட்சிப்போம் என்றாண்டவர்
சத்தியமிட்டே மொழிந்தார்
அவர் கிருபாசம்;
இயேசு பாவி நேசர்தாம்.
3. மந்தையில் காணாதது
மேய்ப்பன் கவையால் திரும்பும்
பாவத்தில் விழுந்தது
அவர் கையினால் எழும்பும்
கெட்டுப்போக மாட்டோம் நாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
4. அழும் பாவகிளையே
தம்மண்டைக் கழைக்கிறாரே,
வரும் பாவியைத் தாமே
தேவப் பிள்ளையாக்குவாரே;
அதை நம்பி வரலாம்.
இயேசு பாவி நேசர்தாம்.
5. துக்கப்பட்டென் பாவத்தை
அறிவிக்க இங்கே வந்தேன்,
மீட்பரே, நீர் கிருபை
செய்யும் அப்போமீட்பைக்கண்டேன்,
போயிற்றென் வியாகுலம்;
இயேசு பாவி நேசர்தாம்,
6. பாவம் சிவப்பாகிலும்
பஞ்சைப் போலாம், எக்கறையும்
அவர் ரத்தம் கழுவும்;
நீதியின் வெள்ளங்கியையும்
ஈவார், அது நிச்சயம்;
இயேசு பாவி நேசர்தாம்.
7. மனச்சாட்சி குத்தினால்
பருவம் தீர்ந்ததென்று சொல்வார்.
மோசே குற்றஞ் சாட்டினால்
அவர் பிணை நின்றுகொள்வார்.
நீங்கிற்றாக்கினை எல்லாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
8. இயேசு பாவி நேசர்தாம்,
அவர் என்னையும் நேசித்தார்,
நானும் வந்து சேரலாம்,
எனக்கும் மன்னிப்பளித்தார்,
சாவிப்போ தாதாயமாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Erdamann Neumeister, † 1756.