175. கெட்டோரை இயேசு சேர்க்கிறார்

1. கெட்டோரை இயேசு சேர்க்கிறார்;
மா பாவத்தால் அழுத்தப்பட்டு,
பூலோகமெங்கும் ஆற்றுவார்,
ரட்சிப்பார், தேற்றுவாருமற்று.
துர்ச்செயல்கள் திகிலினால்
நிறைந்து, மோசே ஞாயத்தால்
தீக் கந்தகப் பாதாளத்துக்குத்
துணையாய் அவர் ஏற்பட்டார்;
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

2. மட்மற்றதாய் அன்பாய் அவர்
வானாவனம் விட்டிங்கே வந்து,
சீர்கெட்ட பாவியின் இடர்
இக்கட்டையும் எல்லாஞ் சுமந்து,
சபிக்கப்பட்ட நமக்காய்
தாமே மரத்தில் சாபமாய்
அறையப்பட் டிரக்கத்தாலே
உயிரைத் தந்த படியாலே
இனி அஞ்சாதிரு என்பார்,
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

3. திக்கற்ற ஆத்துமங்களை
அவர் இப்போதரவணைத்து
அவர்களுக்கு வேதனை
இல்லாமல் குற்றத்தைக் குலைத்து,
“நான் சிந்தின இரத்தத்தை
நினை, உன் பாவச்சேனையைக்
கடலின் ஆழத்தில் புதைந்தேன்,
நீ வாழ மேட்சந் தேடி வைத்தேன்,
மகிழ்” என்றாற்றித் தேற்றுவார்.
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

4. பிதாவிடம் அவர்களைத்
தாமே கையேந்திக் கொண்டு போவார்
இத்தால் அவர்க்குக் கிருபை
பிறக்கும், இனிப் பாவம் பாரார்;
மிகுந்த பட்சமாய்ப் பிதா
அவர்களுக்குத் தம் நேசப்
பிள்ளைகளோடே பங்கு தந்து,
பரத்தின் வாசலைத் திறந்து,
மகா இரக்கங் காண்பிப்பார்;
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

5. கண்ணீர் சொரிந்தோர் பேரிலும்,
இன்னுஞ் சீர்கெட்டலைந்தோர் மேலும்
இவர்க்கு மனமுருகும்,
இம்மேய்ப்பரும் இம்மானுவேலும்
தீட்பாயக்காரர் திட்டவும்
அல்லோ சகேயு வீட்டிலும்
குணம் அளிக்கவந்து தங்க,
மா பாவி மீதிலும் இரங்கி,
அவள் துக்கத்தை ஆற்றினார்,
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

6. மறுதலித்த சீஷனைத்
திரும்பவுந் தாம் கைவிடாமல்
கண்ணோகினாரே, இத்தனிய
அப்போது மாத்திரஞ் செய்யாமல்,
எப்போதும் அவர் சற்குணர்,
இரக்கம் அன்பு முள்ளவர்;
முன் பாவிக்கிங்கே தாழ்விடத்தில்
இரக்கஞ் செய்தோர் உன்னத்தில்
உயர்ந்தபின் வேறாயிரார்,
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

7. வா, பாவி, நீ யாராகிலும்
வா, உன் பொல்லா வழியை விட்டு,
குனிந்து சேர்ந்த யாரையும்
தள்ளாத ரட்சகரைக் கிட்டு;
உனக்கு மோட்சம் வேண்டாமோ,
வீணாய் நீ சாக மனமோ,
மீட்டோரிருக்கப் பேய்களுக்குக்
கீழ்பட்டிருப்ப தென்னத்துக்கு,
வேண்டாம், தப்பித்துக்கொள்ளப்பார்;
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

8. கன சுமை சுமந்தோனே,
வா, வா, உன் அங்கலாய்ப்பைக் கேட்பார்;
நீ பாரத்தால் தரையிலே
நகர்ந்து வந்தும், உன்னைச் சேர்ப்பார்,
அடைக்கலம் அவர் மனம்
வா, வா என்றெத்தனை தரம்
நின்றுன்னை நோக்கிச் சத்தமிட்டார்,
வாவேன்,  அனைத்தையும் மன்னித்தார்,
வா, ஏழைப்பூச்சி, தண்டியார்;
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

9. “நான் மா பெரிய பாவியே,
நான் மட்டுத் திட்டமு மில்லாதே
தெய்வன்பைப் போக்கடித்தேனே,
இனி மன்னிப்புண்டோ” என்தாதே.
நீ கபடற்ற உண்மையால்
பணிந்து கிறிஸ்தை அண்டினால்
பலத்த கையினால் ரட்சிப்பார்;
உன்க்குக் கிருபை அளிப்பார்;
நீங்காத கேட்மை நீக்குவார்;
கெட்டோரை இயேசு சேர்க்கிறார்.

10. “பின்னால் ஆகட்டும், இன்றுதான்
அவர் இரக்கம் முடியாதே,
இன்னின்ன இன்பம் முந்தி நான்
ருசிக்கலாம்”, என்றுஞ் சொல்லாதே,
அவர் அழைக்கையில் பணி,
கை நீட்டும்பொழுதே பிடி
ரட்சிப்பின் நாளில் தூங்கினோர்கள்;
மோட்சானந்த்த்தில் பங்கற்றோர்கள்;
பிற்பாடு கூட்பிட்டால், கேளார்;
இன்றே வா, இன்ற சேர்க்கிறார்.

11. கெட்டோரைத் தேடும் நேசரே,
ஆ, என்னைச் சேர்த்துக்கொண் டணையும்.
எல்லாரையும் ரட்சிப்பையே
பிடிக்கப் பலமாய் அசையும்.
தவிப்பவர்க்கு உமது
அன்புள்ள நெஞ்சைக் காண்பித்து,
அவனவன் உம்மண்டை சேன்று,
இப்பாவியையுஞ் சேர்த்தா ரென்று,
மகிழ்ந்து, தேறுமட்டுக்கும்
கெட்டோரைச் சேர்த்துக் கொண்டிரும்.

L.F.F. Lehr, † 1744.