183. பூலோகச் செல்விக்கையும் பொன்னும்

1.பூலோகச் செல்விக்கையும் பொன்னும்
மினுக்கும் எனக்கு வேண்டாம்;
என் ஆவிக்காகும் நன்மை ஒன்றும்
இங்கில்லை யாவும் மாய்கையாம்,
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

2.என் பொன்னுஞ் செல்வமுங் கதியும்
என் பொக்கிஷமும் அவரே;
என் ஆவி அவர்முன் பணியும்;
ஆம் அவர் என் மகிழ்ச்சியே.
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

3.புவி தன் இச்சையோடழியும்,
தசையின் அழகற்றுப்போம்,
நரரின் வேலைகள் இடியும்,
எல்லாம் மண்ணாகக் காண்கிறோம்,
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

4.என் ஜீவனும் என் ஆவிக்கான
அடைக்கலமும் அவரே;
நான் என்றைக்கும் பிழைப்பதான
இரட்சிப்பவரால் உண்டே,
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

5.அவர் ராஜாதி ராஜாவான
மகத்துவத்தின் ஆண்டவர்,
அவர் எல்லாம் விதமுமான
இக்கட்டை நீக்கும் ரட்சகர்
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

6.அவர் அதிபதியாய் ஆளும்
இராச்சியம் அழியாதே;
அவர் ராஜாசனம் ஓர்க்காலும்
விழாமல் என்றும் நிற்குமே,
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

7.அவருடைய பொக்கிஷத்தின்
ஐஸ்வரியம் மாளாதது;
அவருடைய சமுகத்தின்
ரூபொப்பில்லாத அழகு.
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

8.தம்முடன் என்னையும் பரத்தில்
மா மேன்மையாய் உயர்த்துவார்;
அடியேனுக்கும் அவ்விடத்தில்
வாசஸ்தலஞ் சம்பாதித்தார்.
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

9.நான் இங்கே தாங்கிடும் வரையில்
தினம் உபத்ரவப்பட்டும்,
பிற்பாடு அங்கே மகிமையில்
அனந்த பூரிப்பு வரும்
பூலோகப் பொருளை நாடேன்,  
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

Scheffier, † 1677.