184. சீர்கெட்ட லோகமே

1.சீர்கெட்ட லோகமே
உன் வாழ்வு எனக்கேது ;
என் இயேசு என் கதி.
நான் உன்னைச் சார்வதேது;
என் ஆஸ்தி இயேசுதான்,
என் செல்வம் அவரே;
சீர்கெட்ட லோகமே.

2 லௌகீக வால்வெல்லாம்
புகையைப்போல கழியும்,
நிழலைப்போலே போம்,
தையைப்போல் முடியும்;
என் இயேசு நித்தியர்,
ஓர்க்காலும் மாறாரே.
நீ எனக்கு வேண்டாம்,
சீர்கெட்ட லோகமே.

3. பெரியோர் பட்சத்தை
நரர் பிடிக்கிறார்கள்,
பெரியவார்களும்
மண்ணென்று சிந்தியார்கள்;
என் இயேசுவினது
தயை மா நல்லதே.
உன் பட்சத்தை நம்பேன்.
சீர்கெட்ட லோகமே

4. அஞ்ஞாயமாகிய
பல விதத்தில் காசை
நரர் சேர்ப்பார்களே,
இதே நரரின் ஆசை,
என் இயேசு எனது
இதயத்திலே
நான் வைக்கும் ஆஸ்தி; போ,
சீர்கெட்ட லோகமே.

5. இகழ்இச்சியை நரர்
பொறுக்க அரியார்கள்,
வீண் பெருமையினால்,
நிறைந்திருக்கிறார்கள்.
நான் கிறிஸ்துவுடனே
சுமக்கும் நிந்தையே
என் பெருமை; நீ போ
சீர்கெட்ட லோகமே.

6. பூலோகத்தாருக்கு
மகிழ்ச்சியும் மினுக்கும்
செருக்கும் மோசம்போல்
சந்தோஷமாயிருக்கும்
என் மோட்சம் நித்தியம்,
என் இன்பங் கர்த்தரே.
உன் செல்வம் அழியும்
சீர்கெட்ட லோகமே.

7. ஓர் நிமிஷத்திலே
பூலோக வாழ்வழியும்;
சாவணுகில் எல்லா
மகிழ்ச்சியும் முடியும்.
நானோ மா பாக்கியன்,
என் வாழ்வு இயேசுவே.
உன் செல்வத்தைத் தேடேன்,
சீர்கெட்ட லோகமே.

8. என் இயேசு என் கதி,
என் இயேசு என் களிப்பு,
என் இயேசு என் கனம்,
என் இயேசு என் ரட்சிப்பு,
என் ஜீவன் அவரே.
என் மோட்சம் அவரே.
நீ சாரமற்றது,
சீர்கெட்ட லோகமே.

G.M. Plefferkorn,  † 1732.