186. கர்த்தர் என் வசமானல்

1. கர்த்தர் என் வசமானல்,
ஏன் பயப்படுவேன்;
உபத்ரவம் உண்டானால்,
நான் ஜெபம் பண்ணுவேன்.
அப்போதென் நிலைமாற
பொல்லாவினை எல்லாம்
ஜெயிக்கப்பட்டுத் தாழ
விழுந்தவத்தமாம்.

2. கர்த்தர்தான் என் துணையும்
என் நேசருமாமே;
புயலில் அவர் கையும்
என் மேல் இருக்குமே;
எல்லா இக்கட்டிலேயும்
என்நோவு யாவிலும்
அது சகாயஞ் செய்யும்
திடனையுந் தரும்.

3. நான் நிற்கும், அஸ்திபாரம்
என் இயேசு, இவரால்
மிகுந்த உபகாரம்
வரும்; ஆகையினால்
என் ஆஸ்தி அவர்தானே,
என் ஜீவனின் பெலன்
அவர்தான், என்னில் நானே
ஒன்றுமில்லாதவன்.

4. என் நீதி இயேசுதானே,
அவர் இல்லாவிட்டால்,
பிதாவுக்கு முன் நானே ,
நான் பாவியானதால்,
விழிக்கவுங் கூடாதே ;
என் இயேசுவன்றியே
ரட்சிப்புக் கிடையாதே ;
என் மீட்பர் அவரே.

5. என் சாவு இயேசுவாலே
விழுங்கப்பட்டது.
அவர் இரக்கத்தாலே
என் பாவக்கேட்டுக்கு
நான் நன்றாய் நீங்கலானேன்;
நான் ஞாயத்தீர்ப்புக்கும்
பயப்படாதோனானேன்,
வாழ்வெனக்கு வரும்.

6. தேவாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுமே,
அப்பாவே என்று சொல்ல
அவர் என் நெஞ்சுக்கே
சகாயம் செய்து ஆற்ற
என் ஆவி தேறுமே.

7. துன்பம் பிசாசினாலே
எழும்புகின்றது;
பொல்லாத லோகத்தாலே
ஓர் கிறிஸ்தவனுக்கு
உபத்ரவம் உண்டாகும்
அவன் நிந்தனையும்
சுமக்கத் தேவையாகும்,
நோவதினால் வரும்.

8. இதெனக்குத் தெரியும்,
ஆனாலும் பின் வாங்கேன்;
அதை எல்லாம் அறியும்
கார்த்தாவைப் பற்றுவேன்.
என்ன என்மேல்  வந்தாலும்,
என் காரியங்களை
எல்லாம் நன்றாக ஆளும்
கர்த்தர் என் நம்பிக்கை.

9. என் மனது களிக்கும்,
நான் துக்கமாவேனோ;
இயேசு என்மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ.
பரத்தில் வைக்கப்பட்ட
அனந்த பூரிப்பு
என் ஆவிக்குப் பலத்த
திடன் உண்டாக்கிற்று.


P. Gerhardt, † 1676.