1. பரமண்டலத்திலுள்ள
மகிமை என் ரம்மியம்;
இயேசு என்கிற அன்புள்ள
ரட்சகர் என் பொக்கிஷம்,
பரலோக நன்மைகள்
என்னுடைய ஆறுதல்.
2. வேறே பேர்மண்ணாஸ்தியாலே
தங்களைத்தேற்றட்டுமேன்;
நான் என் நெஞ்சை இயேசுவாலே
தேற்றிவிண்ணைநோக்குவேன்
மண் அழியும். இயேசுவோ,
என்றும் நிற்கிறார் அல்லோ.
3. எனக்கவரில் மிகுந்த
ஆஸ்தி அகப்பட்டது
விக்கினங்களால் சூழுண்ட
லோக ஆஸ்தி எதற்கு,
இயேசுதான் என் ஆத்துமம்
தேடிய நற் பொக்கிஷம்.
4. லோக மகிமை மினுக்கி,
இன்பமாகக் காண்பித்ததும்,
அதைச் சீக்கிரம் அமுக்கிப்
பாழ்க்கடிக்கும் நாள் வரும்;
சடுதியில் அதற்கு
வந்திடுமே அழிவு.
5. இயேசுவோ அளிப்பதான
பரலோக நன்மைகள்
ஏழை ஆத்துமத்துக்கான
உத்தம களிக்குதல்
உண்டு பண்ணி, அதற்கு
என்றும் இருக்கிறது.
6. பரம கதி மாளாது,
அதைப் பொட்டுந் துருவும்
தீயும் வெள்ளமுந் தொடாது,
விக்கினமுங் கொள்ளையும்
கேடும் அவ்விடத்திலே
என்றென்றைக்குஞ் சேராதே.
7. லோக இன்பத்தை ருசிக்கும்
நூறு வருஷத்திலும்
இயேசுவோடு சஞ்சரிக்கும்
ஒரு நாளே இங்கேயும்
தாவிளை, அங்கவரைச்
சேர்ந்தாலோ வாழ்வெத்தனை.
8. கூத்துஞ் சூதுஞ் செல்விக்கையும்
என்னை ஆற்றமாட்டாதே;
ஆண்டவரின் மா தயையும்
அதன் நிச்சயமுமே
எனதாத்துமத்துக்குச்
செல்வம் வாழ்வுமானது.
9. எனக்கு மோட்சானந்தத்தில்
பங்குண்டாக, இயேசுவே,
நீர்தான் இவ்வனாந்தரத்தில்
எனக்குத் துணையாமே.
ஆ, நான் இன்றும் என்றைக்கும்
உம்முடன் இருக்கவும்.
Salomo Liscovius, † 1689.