188. கர்த்தர் என் மேய்ப்பர், ஆகையாலே

1. கர்த்தர் என் மேய்ப்பர், ஆகையாலே
நான் தழிச்சியை இனிக் காணேன்,
அவர் தரும் நல் மேய்ச்சலாலே
குளிரிச்சியை அடைகிறேன்,
ஜீவ தண்ணீரைக் அவர் காட்டி,
யென் தாகத்தை  அத்தாலே ஆற்றி,
ஒவ்வொரு ஆட்டையும்  காப்பார்;
நான் தொய்ந்துபோனால் அவர் வந்து
என் நெஞ்சுக்குப் பலத்தைத் தந்து,
திரும்ப ஆற்றித் தேற்றுவார்.

2. எனக்கவர் வழியைக் காட்டிப்
போனால், நான் பின்னே செல்லுவேன்,
இருட்டிலும் என்னைக் காப்பாற்றி
நடத்துவாரே, பின்வாங்கேன்.
எந்த நெருக்கம் பள்ளம் மேடும்
முள் காடும் நேரிட்டும், ஓர் கேடும்
வராது; கோலால் நீர் அல்லோ
எனக்காறுதல் தருவீரே,
அடியேனோடு வருவீரே,
ஓர் பயமும் எனக்குண்டோ.

3. கொழுப்பும் பாலுந் தேனுமாக
இருக்கிற விருந்தையே
பகைஞருக்கு எதிராக
நீர் எனக்கென்று செய்தீரே;
நீர் என்மேல் வார்த்த எண்ணெயாலே
நான் தேற்றரவடைந்ததாலே
மகிழ்ந்துகொண் டிருக்கிறேன்;
என் ஆவிக்கான வாழ்வுண்டாக,
என் பாத்திரம் நிறைந்ததாக
இருக்கும் தாகமாயிறேன்.

4. இனி நான் உம்மை என்றென்றைக்கும்
விடேன், அன்புள்ள மேய்ப்பரே;
உம்மால் நான் உள்ள நாள் வரைக்கும்
மா பாக்கியம் அடைவேனே;
என் தேகஞ் செத்தும் பயமில்லை,
நான் தேவரீருடைய  பிள்ளை,
ஓர் அடிமைக்கு வீட்டிலே
சுதந்திர முண்டாயிராது,
மகனுக்கோ அது தப்பாது;
நீர் என்னை தள்ளீர், இயேசுவே.

5. அல்லேலூயா, துதி உமக்கு
உண்டாவதாக, மேய்ப்பரே,
அநேக நாவுகள் எனக்கு
நான் உம்மைப் பாடுவதற்கே
நீர் கொடுத்தாலும் எல்லா நாவும்
அதன் தோத்திரங்கள் தான் யாவும்
போதாது, உம்மை நேசிக்கும்
இதயத்தை எனக்குத் தாரும்.
என் மேய்ப்பர் நீர், நான் உமதாடும்;
என்னை என்றுங் கடாட்சியும்.

A.J.Freylinghausen, † 1739.