1. இயேசு ஸ்வாமியினுடைய
காயாங்களின் கூட்டிலே
சாங்கோபாங்கமாய் மறைய
ஓடிவா, என் மனமே;
ஆட்டுக்குட்டிபோல் அமர்ந்து,
துக்கமின்றிச் சுகமாய்
இயேசுவின் மடியில் வந்து
இளைப்பாறக் கடவாய்.
2. மண்ணுடன் ஒட்டாமல் ஏறு;
அவரண்டை வந்திரு;
அந்த மெய்ப்பொருளைத்தேடு,
அழிவுள்ளதை வெறு.
பல பக்தியாயிராமல்,
இயேசு ஒருவரையே
பற்று. அவரையல்லாமல்
ரம்மியங் கிடையாதே.
3. அவர் மந்தையின் ஆடாக
அவரண்டையில் தரி;
லோக வாழ்வை நாடாயாக,
கர்த்தர் உனது கதி.
மன்பொருள்கள் என்னத்துக்கு
நோவுண்டாக்குகின்றன;
மெய்ப் பொருளாங் கர்த்தருக்கு
உன் இதயத்தைக் கொடு.
4. நீ மகிழ மனமானால்.
சுவிசேஷத்தைப் படி,
இயேசு உன் மகிழ்ச்சியானால்
உன் ஆதாயம் மிகுதி
அவர் மாசில்லாத அந்தம்,
பரிபூரணம். எல்லாம்;
செல்வம், மகிமை, ஆனந்தம்,
யாவும் அவரில் உண்டாகும்,
5. லோக நேசத்தை எண்ணாதே,
இயேசு நற்சிநேகிதர்.
மண்ணாம் ஆஸ்தியை நாடாதே.
மாளப்பொக்கிஷம் அவர்;
தம்முடயவர்களுக்கு
இங்கே தேவையானதைத்
தருவார், நீ அவருக்கு
உன் இதயத்தைப் படை.