1. எதெனக்கு நன்றாயிருக்கும்
என்றுமக்குத் தெரியுமே,
நீரே எக்காரியங்களுக்கும்
அதிபதி; ஆ, உமக்கே
நான் என்னை ஒப்புவிப்பேனே,
என் சுய யோசனை வீணே.
2. என் மனத்தில் உம்மைப்பற்றாத
வீண் நினைவைப் பிடுங்குமேன்,
என் ஆத்துமத்துக்கு, நீங்காத
நற்சிந்தை வேண்டுமென்கிறேன்
ஆ, என்னை நன்றாய்ச்சோதியும்
உண்மையு மாக்கியருளும்.
3. நீர் என் பிதா, நீர் பாவியான
எனக்கென் தப்பிதங்களை
மன்னித்து, இயேசுவால் அன்பான
தயாபரர் தானென்பதை
அப்போ, மா தைரியத்துடன்
நான் சொல்லிக் கொள்ளத் தக்கவன்.
4. நீர் என் பிதா என்றுண்மையாக
நான் சொல்லக் கூடுமெயானால்
அப்போதிக்கட்டும் ஜெயமாகத்
திரும்பி உமதன்பினால்
தித்திப்பாய் மாறிப்போகுமே,
இரக்கமுள்ள கர்த்தரே.
5. இப்போதும் நீர் மா தயவாகக்
கொடுத்த நல்லவார்த்தையை,
பலத்த விசுவாசமாக
நான் பற்றி, ஏழை மனத்தை
அத்தாலே தேற்ற, நீர் தரும்
தேவாவியாலே உதவும்.
6. அனாதி வஸ்துவே, அன்பாக
உலகுண்டாகு முன்னே தான்
நீர் உமக்கென்னைப் பிள்ளையாக
நேமித்து, நரகத்தில் நான்
விழாப்படிக்குக் கிறிஸ்துவை
எனக்குத் தந்ததே தயை.
7. என் குற்றத்துக்கும் ஆக்கினைக்கும்
நான் தப்பிப்போக அவரே
ரட்சிப்படியேனுக் கென்றைக்கும்
உண்டாகப் பண்ணினோராமே,
இதற்குத் தேவ ஆவியார்
முத்திரையாயிருக்கிறார்.
8. நீர் என்னை இந்தநாள்மட்டாக
நடத்தின கிருபைக்கு
நான் என்ன சொல்வேன், பிதாவாக
நீர் என்னை ஆதரித்தது
அதிசயம், இனி அங்கே
மாளாத வாழ்வும் ஈவீரே.
9. ஆ, உமதன்பை நான் சிந்திக்கும்
போதெனதாவி என்னிலே
மிகுதியாகவுங் களிக்கும்;
ஆ, மெத்தவும்நான் உம்மையே
நேசிப்பேனாக என்பது
நான் உம்மைக் கேட்கிற மனு.
10. இப்போதும் உம்முடையோனான
நான் உமது புகழ்ச்சிக்கு,
பிதாவே, பரிசுத்தமான
படி நடக்க, உமது
ஒத்தாசையை எந்நாளிலும்
நீர் எனக்குத் தந்தருளும்.
11. என் பேச்சிலுஞ் சிந்திப்பிலேயும்
வேலையிலேயும் நீதியே
விளங்க, நீர் சகாயஞ் செய்யும்,
அதும்மால் ஆக வேண்டுமே,
இல்லாவிட்டால் இதில் எல்லாம்
மிகுந்த தாறுமாறுண்டாம்.
12. என்மேல் உபத்ரவத்தை வர
விட்டீரானால், நீர் எனக்குச்
சகாயராய்த் திடனைத் தர
வந்தென்னுடைய மனது
பணியவும், அமரவும்
நீர் என்னை ஏவியருளும்.
13. ஆ, உமதாவியின் வரத்தை
என்மேலே ஊற்றும் கர்த்தரே,
அதென்னுடைய இதயத்தை
நற்குணமாக்கும் ஈவாமே.
இனி நான் என்றும் உம்மிலும்
நீர் என்னிலும் இருக்கவும்.
O.B.173 (or 172) N.B.200. (or199)
Israel Clauder † 1721.