196. என்னிடத்திலே படிக்க

1. என்னிடத்திலே படிக்க
வாருங்களென்றென் நித்ய
ஜீவனாயிருக்கிற
இயேசு சொல்லிப் போதிவிக்க
வந்திருக்கும் போதகர்
ரட்சகருமானவர்.

2. ஆ, என் ஜென்ம பாவத்தாலே
என்னுடைய மனது
கேடாயிருக்கிறது.
யாவும் என்னில் அதினாலே
மாறுபாடாம் என்னிலே
மாமிசக் குணம் உண்டே.

3. இயேசுவே, என்னில் உண்டான
பொய், அநீதம், பெருமை,
க்ரோதம் முதலானதை
வேரறுக்கிறதற்கான
பலத்தைத் தந்தருளும்,
சீர் அளித்து ரட்சியும்.

4. தேவரீரது தயையை,
பட்சம், நீதி. சற்குணம்,
பரிசுத்தம், சத்தியம்,
மா இரக்கம், பொறுமையை
என் இருதயத்திலே
நட்டு வையும், இயேசுவே.

5. தேவரீரை நான் பின் சென்று
உமக்குக் கனம் வர
நடந்தே, உம்முடைய
சீஷனாக உமக்கென்று
என்னைத் தந்து மாய்கைக்கும்
லோகத்துக்குஞ் சாகவும்.

6. என்னை உமாதாவியாலே
நீர் நடத்தி உமது
நல் வரத்தை எனக்கு
நித்தந் தந்து, அதினாலே
சிந்தை செய்கை யாவையும்
நீர் ஆசீர்வதித்திடும்.

7. ஆ, என் முடிவு மட்டாக
இந்த அன்பைக் காண்பியும்,
பிறகு நான் என்றைக்கும்
உம்மை மனத்தாழ்மையாகப்
போற்றவுந் துதிக்கவும்
பாக்கியத்தை அருளும்.

J. Olearius, † 1684.