1. கர்த்தாவே, உமக்கு
நான் கீழ்ப்படிந்தோனாக
நடக்குஞ் சிந்தையை
அளிப்போம் என்பதாக
நீர் வாக்களித்தீரே;
இவ்வாறு நித்தமும்
நடக்க எனக்கு
ஒத்தாசையாயிரும்.
2. நீர் யாவுங் காண்கிறீர்,
இதை நினைப்பேனாக;
உமக்கேற்காததை
நான் செய்தால், அதற்காகத்
தாண்டிப்பீர், ஆகையால்
எந்த நிமிஷத்திலும்
நான் தேவரீருக்குப்
பயந்திருக்கவும்.
3. என் செய்கை ஞாயமோ,
நான் லோக மார்க்கமாக
நடந்தால் நல்லதோ,
உமக்கு மறைவாக
நடக்கும் காரியம்
உண்டோ என்றென்னையே
நான் கேட்கும் புத்தியை
அளியும் கர்த்தரே.
4. அடியேனை நீரே
நடத்திக்கொள்வீராக,
என் மனத்தின்படி
நான் போனால் மோசமாக
முடியுமே; நீரோ
என் வேளையில்லெல்லாம்
என்னை நடத்தினால்,
மா பாக்கியம் உண்டாம்.
5. நான் சகலத்தையும்
வெறுத்து, உம்மைப்பற்றி,
எனது மாம்சத்தின்
குணத்தையே அகற்றி,
நான் உமதைக்யத்தை
எப்போதுந் தேடவும்
எனது மனத்தை
நீர் உம்மண்டைக்கிழும்.
6. ஆ, என்னில் உமது
மா கிருபை வீணாகப்
போகாப்படிக்கு, நான்
உம்மில் நிலைப்பேனாக;
அப்போ தும்மோடேதான்
மோட்சானந்தத்திலும்
இருக்கும் பாக்கியம்
எனக்ககப்படும்.
J. Olearius, † 1684.