1. என் நெஞ்சை, ஸ்வாமி, உமக்கே
ஈவாய்ப் படைக்கிறேன்,
நீர் இந்தக் காணிக்கையையே
கேட்டீர் என்றறிவேன்.
2. "என் மகனே, உன் நெஞ்சை
நீ இக்கடனைத்தீர்,
வேறெங்கும் நீ சுகப்பட
மாட்டாயே" என்கீறீர்.
3. அப்பா, நீர் அதைத் தயவாய்
அங்கீகரிக்கவும்,
நான் அதை உள்ளவண்ணமாய்
தந்தேன், அன்பாயிரும்.
4. மெய்தானே, அது சுத்தமும்
நற்சீரு மற்றது,
அழுக்குத் தீட்டும் மாய்கையும்
அதில் நிரம்பிற்று.
5. இப்போதோ மிகுதியுமாய்
தியங்கி, உமக்கு
ஏற்காப் பொல்லாப்பைச் சுத்தமாய்
வெறுத்து விட்டது.
6. நான் உண்மையாய் குணப்பட
அதை நொறுக்குமேன்,
இத்தயவை நீர் காண்பிக்க
பணிந்து கேட்கிறேன்.
7. ஆ, என் கல்நெஞ்சை நீர் நன்றாய்
உருக்கி, முழுதும்
புலம்பலும் கண்ணீருமாய்க்
கரையப் பண்ணவும்.
8. என் நெஞ்சுக்கப்போ, இயேசுவே,
எல்லாரின் மீட்புக்கும்
நீர் சிந்தின இரத்தமே
பலிதமாகவும்.
9. மன்னிப் புண்டாக்கி, உள்ளத்தைச்
சீராக்கும், உம்மையே
நான் பற்றிக் கொள்ளுந்திடனை
அளியும் கர்த்தரே.
10. என் குற்றங்கள் என் ஆக்கினை
எல்லாம் எடுபட,
நீர் உம்முடைய நீதியை
என் ஆவிக்கருள.
11. ஆ, எனக்கிந்தச் சுத்தத்தின்
உடுப்புடுத்துமேன்;
அப்போ மாசற்று ஸ்வாமியின்
முன்பாக நிற்கிறேன்.
12. தேவாவியே, நான்பாழ்நிலம்
வறண்ட பூமியும்,
நீர் இயேசுவின் நிமித்தியம்
என்மீதில் பாயவும்.
13. இருள் பகையுங் கபடும்
உம்மாலே போய்விட;
வெளிச்சம் நேசம் மெய்மையும்
உம்மாலே வளர.
14. இங்கேன்னைத் தீயோர் கெட்டசீர்
துன்மார்க்கம் மோசமும்
சூழ்ந்தாலும், ஸ்வாமிக் கென்னை நீர்
மெய்ப் பக்தனாக்கவும்.
15. உபத்திரவம் வருகையில்
நீர் ஆதரித்திரும்;
நீர் என்னை நல் நம்பிக்கையில்
உறுதியாக்கவும்.
16. உள்ளேயிருந்து நித்தமே
அழுக்குகள் வரும்,
அத்தால் என் உள்ளத்தை நீரே
நற்சுத்தமாக்கவும்.
17. இனி ஓர்க்காலும் என்னிலே
அஞ்ஞாயம் கபடும்
காணாமல், என்னைக் கர்த்தரே
நல் நீதியாக்கவும்.
18. நீர் என்னைக் கிறிஸ்தின் சாயலாய்
எல்லாரிடத்திலும்
மென்மேல் புறம்பும் உள்ளுமாய்
நற்சாந்தமாக்கவும்.
19. நீர் என்னைக் கிறிஸ்துமார்க்கத்தில்
மேற்பூச்சும் மாயமும்
இல்லாதோனாக்கி, அவரில்
நல்லுண்மையக்கவும்.
20. என் முழுநெஞ்சையும் அன்பாய்
நீர் ஸ்வாமி, என்றைக்கும்
அகமும் ஆலயமுமாய்
படைத்துக்கொண்டிரும்.
21. நீர் அதை ஆளும், கர்த்தரே
அத்தால் நான் பாக்கியன்;
நான் உலகத்தானல்லவே,
நான் உம்முடையவன்
22. நயம் பயமுமாய் இனிப்
பொல்லாத உலகம்
அழைக்கும் சர்ப்பனை சதி
எல்லாம் வீண் காரியம்.
23. பிசாசின் மணவாளியே,
ஓர்க்காலும் உன்னை நான்
சேரேன், உன் பேச்சு மாயமே
நீர் சர்ப்பக் கூட்டந்தான்.
24. போ, லோகமே; போ, பாவமே;
என் நெஞ்சம் உமக்கு
எக்காலத்துக்கும் இயேசுவே,
கொடுக்கப்பட்டது.
J.K. Schade, † 1698