1. ஆ, சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தால், எத்துணை
நேர்த்தியான இனிமை.
2. அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ்வடிகையில்
கந்தம் வீசும் எண்ணெய்க்கே
ஒத்ததாயிருக்குமே.
3. அது ஏர்மோன் மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாயத்து
நற்பனிக்கும் ஒத்தது.
4. அங்கேதான் தியாபரர்
ஆசீர்வாதந் தருவார்,
ஆங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.
5. ஆகிலும் உலகிலே
நேசம் மா அபூர்வமே,
தன் உயிரைப்போலே யார்
மன்னுயிர்க்கிரங்குவார்.
6. மாந்தர்க்குள்ளே ஐக்கியமும்
அன்புமில்லை, எவனும்
தன் சுகத்தைப் பார்க்கிறான்,
அயலானைச் சிந்தியான்.
7. விண்ணில் ஆளுஞ்சிரசே,
இப்பிரிவினையிலே
காணுங்கேடனைத்துக்கும்
பரிதாபமாயிரும்.
8. மேய்ப்பரே, நீர் கிருபை
செய்து; சிதறுண்டதை
மந்தையாக்கி, யாவையும்
சேர்த்தணைத்துக் கொள்ளவும்
9. எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர,
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும், இயேசுகிறிஸ்துவே,
10. நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி, நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக்கட்டளையிடும்.
11. மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.
12. எத்துணை சந்தோஷமும்
நன்றும் அப்போ தென்படும்,
நல் வரங்களுக்கெல்லாம்
நேசத்தால் வழியுண்டாம்.
13. வெவ்வேறாய்ப் பிரிந்தது
ஒத்துப்போனபிறக்கு
இச்சிநேகக் கூட்டத்தார்
தெய்வ அன்பைப் பாடுவார்,
14. பரிசுத்தமாகிய
வேதம் மகிமைப்பட
எங்கள் வேண்டுதலையே
அன்பாய்க் கேளும், கர்த்தரே.
1-4 Mich. Muller, † 1704
5-14 J.C.Nehring, † 1736.