1. இங்கும்மண்டைப் பணிந்து சேரும்
என் ஆவி தேவரீரைத் தேடும்,
என் எளிமையை மிகவும்
அன்பாய்க் கண்ணோக்கியருளும்.
2. நான் உம்முடைய சாவில் சாக
நீர் அனுகூலஞ் செய்வீராக;
என் கெட்ட ஸ்பாவம் உம்மிலே
மடியப்பண்ணும், இயேசுவே.
3. என் நெஞ்சின் முரட்டாட்டமான
குணம் அடங்க, சாந்தமான
இருதயமும் மனமும்
உம்மால் என்னில் உண்டாகவும்,
4. நான் தேவரீரை நேசித்தாலும்,
சினேகத்தாலே பற்றினாலும்,
அத்தோடே இன்னும் என்னிலே
கொஞ்சங் கலப்பிடம் உண்டே,
5. நான் இன்னும் உமதாவியாலே
நற்சீர் அடைந்து, அதினாலே
உம்மிலிருக்கும் சிந்தைக்கே
மென்மேல் ஒப்பாக வேண்டுமே,
6. என் புத்தியால் அது வராது.
அதற்கென் பலமும் போதாது,
உம்மாலொழிய நெஞ்சிலே
நல்ல குணம் உண்டாகாதே.
7. நீரோ எப்போதும் உண்மையுள்ளோர்
என்றறிவேன், நீர் தயவுள்ளோர்;
என் கெட்ட இச்சை நீங்க நீர்
என் நெஞ்சத்தை தூயமாக்குவீர்.
8. நீர் நற்செயத்தைத் தருமட்டும்
என் ஆவி தேவரீரைப் பற்றும்.
கருத்துமாய்ப் போராடுவேன்,
என் இச்சையை விரோதிப்பேன்.
9. உம்மால் என் சத்துருவை வென்று
கெலித்தோனாய் முன் செல்வேனென்று
நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,
உம்மால் ரட்சிக்கப்பாடுவேன்.
10. ஆகையினால் என் ஆத்துமத்தை
பிடித்திருக்கிற இக்கட்டை
நான் உமக்கொப்புவிக்கிறேன்,
உம்மால் நான் தேற்றப்பாடுவேன்.
11. அதேனென்றால் நான் வஞ்சையாக
மன்றாடும்போது நீர் அன்பாக
அடியேனைக் கண்ணோக்குவீர்.
வேண்டிக் கொண்டோனைக் கைவிடீர்,
12. என் பக்தி இதனால் வளரும்,
நீர் நேசம் என்றென் நெஞ்சுகணம்;
இத்தால் என் ஆதுமத்திலே
கசப்பும் இன்பமாகுமே.
C.F.Richter, † 1711