1. என் இயேசுவே, என் சத்தத்தை
கேட்டன்பாய் என்னைப் பாரும்,
மெய் விசுவாச பக்தியை
அடியேனுக்குத் தாரும்,
நான் உம்மைப்பற்றி, உம்மிலே
பிறரை உண்மையாக
உமக்காக
சிநேகித் தும்மையே
நன்றாய்ப் பின்செல்வேனாக.
2. நான் தெய்வ சத்தியத்திலே
பிசகில்லாமல் நிற்க
பலம் அளியும், கர்த்தரே.
விசேஷமாய், மரிக்கக்
கிடைக்கும்போதென் தர்மம்நான்
நம்பாதோனாய், மாசற்ற
உம்மைப் பற்ற
என் மனத்தை நீர்தான்
நல்லாவியால் திடத்த.
3. நான் மனமார யாவர்க்கும்
அன்பாய் மன்னிப்பேனாக,
நீர் எனக்கு மன்னிக்கவும்;
இக்கட்டென் எதிராக
வந்தால், நான் திகிலின்றியே
நிலைக்கிறதற்காக
இன்பமாக
தெய்வீக வார்த்தையே
திடன் தருவதாக.
4. வாழ்வாகிலும் சாவென்கிலும்
என் நெஞ்சை உம்மைவிட்டுப்
பிரிக்கவே ஒட்டாதேயும்;
முடிய நான் தரித்து
ரட்சிப்படைய, இயேசுவே,
நீரே பலத்தைத் தாரும்,
அதை யாரும்
தன்னால் அடையானே,
நீர் ரட்சியும், நீர் காரும்.
5. போராடும் பலவீனனை
அன்பாய்ப் பார்த்தாதரியும்,
என்னால் ஆகாது; நீர் துணை
நீர் பலத்தையளியும்.
உம்மாலே சோதனையிலே
விழாமல் நிற்பேனாக,
நீர் அன்பாகப்
போராடினோனுக்கே
ஒத்தாசை செய்வீராக.
Johann Agricola. † 1566.