205. கரையேற ஆவலான மனிதன்

1. கரையேற ஆவலான
மனிதன் பரத்துக்கே
போம் வழியில் திட்டமான
சீராய்ப் போக வேண்டுமா;
நேரந் தப்பு முன்னதாக
ஆயத்தப்படுவானாக;
அவன் மற்றதை எல்லாம்
விட்டுவிடல் தேவையாம்,

2. இயேசுவே மகா அன்பாக
மோட்சப் பந்தயத்தை நீர்
அதைத் தேடத் தக்கதாக
எனக்குக் காண்பிக்கிறீர்,
ஆ, நீர் உம்முடையோருக்கு
அங்கே வைத்த  க்ரீடத்துக்கு
மின்னிக்கொள்ளும் அழகு,
என்றும் நிலைக்கின்றது.

3. அடியேனுக் கங்கே சேரும்
பாக்கியம் எப்போ வரும்;
எனதாவி அதைத் தேடும்
ஆசை என்னில் பெருகும்,
இங்கோ ஏழைப் பாவியான
என்னைச் சுற்றிக் கொள்வதான
தொந்தரவு எனக்குச்
சோர்வுண்டாக்குகின்றது.

4. வெகுவான தாறுமாறு
நெஞ்சில் இருக்கின்றது.
போராடாமல் இளைப்பாறு
என்றென் மனம் எனக்குச்
சொல்லுமே; பிசாசினாலே
பாடும் உண்டாகையினாலே
உம்மை நோக்கி அடியேன்
கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்.

5. ஆ, இப்பலவீனனுக்கு
நீர் இரங்கும், இயேசுவே,
நீர்தான் என் சகாயத்துக்கு
வாருமேன், என் மீட்பரே.
என்னை நீர் வழி நடத்தும்,
தீமை யாவையும் அகற்றும்,
திடனாம் பலத்தையும்
எனக்குத் தந்தருளும்.

6. என்னைப் பின்னிட இழுக்கும்
லோகத்தார் கலைப்புக்கே
நான் செவிகொடாதிருக்கும்
பலம் அப்போ காணுமே.
நீர் என் அனுகூலர்  என்று
உம்மால் யாவையும் நான் வென்று
உம்மிடம் சேர்ந்தடியேன்
உம்மை என்றும் போற்றுவேன்.

J.Mentzer, † 1734.