211. தயாபரா, எல்லா நல்லீவின்

1. தயாபரா, எல்லா
நல்லீவின் ஊற்றும் நீரே;
உண்டானதை எல்லாம்
அளித்தோர் தேவரீரே,
என் தேகம் ஆவிக்கும்
என் மனச் சாட்சிக்கும்
சீராயிருக்கிற
ஆரோக்கியம் கொடும்.

2. என் நிலைமையிலே
நீர் எனக்குக் கற்பித்துக்
கொடுத்த வேலையைக்
கருத்தாய் நான் முடித்து,
நான் தக்க வேளையில்
ஒவ்வொன்றைச் செய்யவும்,
என் செய்கை வாய்க்கவும்
சகாயமாயிரும்.

3. எப்போதும் ஏற்றதை
நான் வசனிப்பேனாக,
வீண் பேச்சென்னாவிலே
வராதிருப்பதாக,
என் உத்தியோகத்தில்
நான் பேச வேண்டிய
இடரற்ற சொல்லைப்
பலப்படுத்துக.

4. துன்னாளிலே பயம்
இல்லாத் துணிவைத் தாரும்,
சுமை சுமக்கையில்
நீர்தான் துணையாய் வாரும்.
சாதால் பகைஞனை
நான் வென்றெந் நேரமும்
நல் யோசனைகளை
உம்மாலே காணவும்.

5. அனைவரோடேயும்         
கிறிஸ்தோனுக் கேற்குமட்டும்
சிநேகம் அன்புமாய்
நான் ஜீவனம் பண்ணட்டும்;
நீர் ஆஸ்தியைத் தந்தால்
அத்தோடே என்றைக்கும்
அஞ்ஞாய உடைமை
சேராதிருக்கவும்.

6. மிக வருத்தமாய்
முதிர்ந்த வயதுக்கு
நான் ஏறக்கட்டளை
ஆதில், அந்நாட்களுக்கு
வினையும் லச்சையும்
இல்லா நரையையும்
நற்பொறுமையையும்
நீர் எனக்கருளும்.

7. என் சாவில் கிறிஸ்துவின்
சாவால் ஜெயிப்பேனாக;
பிரிந்த ஆவியை
உம்மிடம் சேர்ப்பீராக.
சவத்துக்கோவெனில்
நல்லோர் கிடக்கிற
குழிகளருகே
இடம் அகப்பட.

8. செத்தோரை நீர் அந்நாள்
எழுப்பும் போதன்பாக
என் மண்ணின் மேலேயும்
வாவென்ற சத்தமாகக்
கைநீட்டி எனக்கு
நீர் ஜீவனுடனே
வானோரின் ரூபத்தை
அளியும், கர்த்தரே.

J. Heermann, † 1647.