212. கர்த்தாவே, உம்மை நம்பினேன்

1. கர்த்தாவே, உம்மை நம்பினேன்
நீர் என் அடைக்கலம் என்றேன்
வெட்காதிருப்பேனாக;
தயாபரா, நீர் எனது
சகாயராவீராக.

2. நீர் உமது செவிகளை
இரக்கத்தோடே என்னண்டை
சாய்த்தே எனக்கான்பாக
இவ்வேளையில் என் ஆபத்தில்
ரட்சிப்பளிப்பீராக.

3. இருபுறத்திலும், இதோ,
திரள் பகைஞரோடிப்போ
எனக்குப் போர் உண்டாகும்;
ஆ, கர்த்தரே, இப்போரிலே
நீர்தாம் என் கோட்டையாக்கும்.

4. நீர் என் பலம், என் கன்மலை,
என் கேடயமும் என்பதைக்
தெய்வீக வார்த்தைசொல்லும்,
என் கர்த்தரே, என் ஜீவனே,
நீர் என்னைக்காத்துகொள்ளும்.

5. பொய் பேசும்லோகம் எனக்குச்
சுருக்கை வைக்குங் கபடு
அநேகமாயிருக்கும்,
என்னண்டையில் இரீராகில்
அடியேனை ஒடுக்கும்.

6. என் ஆத்துமத்தை உமக்கே
நான் ஒப்புவிப்பேன், கர்த்தரே,
நீர் என்னை மீட்டோராமே;
எந்நேரமும், முடிவிலும்
ரட்சிப்பவர் நீர்தாமே.

7. பிதா குமாரன் ஆவியே,
த்ரீயேகரான உமக்கே
துதி உண்டாவதாக;
அளவில்லாத் தயாபரா,
உம்மால் ஜெயிப்பெனாக.

Adam Reusner, † 1575.