1. கர்த்தாவே, சின்னப்பிள்ளை நான்,
என் பலம் கொஞ்சமே,
ரட்சிப்படைய ஆசைதான்
வகையறியேனே; வகையறியேனே.
2. எனக்கொப்பாய், என் மீட்பரே,
ஓர் பிள்ளையாகி நீர்
என் பாவம் சாவும் நீக்கவே
இரத்தம் சிந்தினீர்; இரத்தம் சிந்தினீர்.
3. இவ்வன்புக்காய் நான் நன்றியைச்
செலுத்த உதவும்
உமக்குப் ப்ரீதியானதை
எனக்குக் கற்பியும்; எனக்குக் கற்பியும்.
4. எனக்குண்டான யாவையும்
நான் பலியாய்த் தந்தேன்;
இரக்கமாய் என் நெஞ்சையும்
நீர் ஏற்றுக்கொள்ளுமென்;:
5. உம்க்கு ஞானஸ்நானத்தில்
நான் புத்திரன் ஆனேன்,
குழந்தையாக மோட்ச்சத்தில்
சுதந்திரம் பெற்றேன்; சுதந்திரம் பெற்றேன்.
6. நீர் என்னைச் சுத்தமாக்கினீர்,
பேய் என்னை மீளவும்
தீண்டாப்படிக்குத் தேவரீர்
சகாயமாயிரும்; சகாயமாயிரும்.