1. கர்த்தாவே, போன ராவிலே
நீர் என்னைத் தயவாகக்
கத்ததற்காக உமக்கே
துதி உண்டாவதாக.
2. இருளில் என்னை நீர் அன்பால்
எவ்விக்கினங்களுக்கும்
விலக்கிக் காத்திராவிட்டால்
என்சீரைப் பேய் கெடுக்கும்.
3. என் நாட்களிலே உமது
மொழிக் கேற்காததாக
நான் செய்ததை நீர் எனக்கு
அன்பாய் மன்னிப்பீராக.
4. இந்நாளும் என்னைச் சத்துரு
தன் சூதினால் பிடிக்க
பிணைக்கப்போகும் கண்ணிக்கும்
நீர் என்னைத் தப்புவிக்க.
5. அடியேனைப் பொல்லாப்புக்கு
விலக்கமாகக் காரும்;
ஸ்வாமி, நீர் என்னை உமது
கையால் நடத்தி வாரும்.
6. என் ஆவி தேகம் யாவையும்
நான் உமக்கொப்புவிப்பேன்;
இக்கட்டில் நீரே அருளும்
சகாயத்தால் கெலிப்பேன்.
7. பிசாசினால் உண்டாகிய
சதியையே அகற்றும்;
இல்லையேல் அதனுடைய
மயக்கம் நெஞ்சைக் கட்டும்.
8. நரர் ஒத்தாசை விருதா
ரட்சிக்கத் தக்கோர் யாரும்
இங்கில்லையே, தயாபரா
நீரே துணைக்கு வாரும்.
9. பிதா குமாரன் ஆவியே
த்ரியேக தெய்வமாகப்
பரத்தில் ஆளும் உமக்கே
துதி உண்டாவதாக.
M.Praetorius, † 1621.