1. கிருபையின் சூரியா,
நித்திய, வெளிச்சமான
நீர் பகல் உதிக்கிற
இப்போ தெங்கள்மேல் உண்டான
ராவிருள் அனைத்தையும்
நீக்கவும்.
2. ஆதித் தாய் தகப்பனின்
பாவத்தாலே லோகமெங்கும்
மூடின மந்தாரத்தின்
விக்கினங்களுக்கிரங்கும்;
ஆ, ஒளி வீசுவீரே
இயேசுவே.
3. நீர் உமதன்பின் பனி
மிகவும் வறட்சியான
நெஞ்சின்மேல் பெய்தருளி,
உமது விளைச்சலான
அடியார் எல்லாரையும்
ஆற்றிடும்.
4. உம்முடைய நேசத்தின்
இன்பமாம் அனலைக் காட்டி
எங்கள் கெட்ட மனத்தின்
துர்க்குணத்தை அத்தால் மாற்றி,
சிஷ்டியும்.
5. இயேசுவே, நான் பாவத்தின்
அசுத்த உடை வெறுத்து
உம்முடைய நீதியின்
வெள்ளை அங்கியை உடுத்து
அதை இன்றும் என்றைக்கும்
காக்கவும்.
6. நீர் வெளிப்படும் அன்றே
நாங்கள் மா சத்தோஷத்தோடே
மண் படுக்கைகளிலே
நின்றேழுந்திருந்தும்மோடே
சேர்ந்தும்மோடே என்றைக்கும்
தங்கவும்.
7. அழுகையின் பள்ளத்தைத்
தாண்டி, பரமகதிக்குப்
போக நீரே எங்களைக்
கூட்டிக்கொள்ளும்; அவ்வழிக்கு
நீரே எங்கள் ஜோதியும்
ஆகவும்.
Christ, Knorr von Rosenroth, † 1689.