222. நெஞ்சே விழித்துப் பாடு

1. நெஞ்சே விழித்துப் பாடு,
உன் கர்த்தரைக் கொண்டாடு,
நல்லீவு யாவுந் தந்தார்,
நரரைக் காத்து வந்தார்.

2. இருளின் திகிலுக்கும்
பிசாசின் மோசத்துக்கும்
இராவில் அவர்தாமே
என்னைக் காத்தவராமே.

3. "அஞ்சாமல் சுகமாகப்
படுத்துக்கொள்வாயாக,
நாமே மறைப்போம்" என்றீர்
ரட்சிக்க வாக்குத் தந்தீர்.

4. நீர் சொன்ன வண்ணமாக
இப்போ நான் சுகமாகப்
புதுப் பகலைக் கண்டேன்,
பலிசெலுத்த வந்தேன்.

5. நீர் எப்பலியைக் கேட்பீர்;
எக்காணிக்கையை எற்பீர்.
நான் பணிவோடு சொல்லும்
துதியை ஏற்றுக்கொள்ளும்.

6. நீர் அதைத் தள்ளீராக;
உமக்குப் பலியாகப்
பின் எதுவும் இராது,
வேறீவும் கிடையாது.

7. இந்நாளும், சேதத்துக்கு
என்னைக் காப்பாற்றுதற்கு
நற்றுதரை அன்பாகத்
துணைக்கு வைப்பீராக.

8. நான் என்ன யோசித்தாலும்,
எதைத் தொடங்கினாலும்,
நீர் வாய்க்கப்பண்ணி வாரும்,
நல் முடிவையும் தாரும்.

9. என் நெஞ்சிலே தரித்து,
என்னை ஆசீர்வதித்து,
நீர் ஜீவ வார்த்தை சொல்லும்,
மோட்சத்தில் சேர்த்துக்கொள்ளும்.

P. Gerhardt, † 1676.