221. விடியுங்காலமான இப்போதும் என்றைக்கும்

1. விடியுங்காலமான
இப்போதும் என்றைக்கும்
நான் முழுமனமான
வணக்கத்தோடேயும்
கர்த்தாவைப் போற்றுவேன்;
என் இயேசு மூலமாக
உம்மையே பக்தியாக
நான் தோத்திரிக்கிறேன்.

2. நிர்ப்பந்தத்தை அன்பாக
நீர் போன ராவிலே
விலக்கினதற்காகத்
துதி, என் கர்த்தரே;
இந்நேர மட்டுக்கும்
நான் செய்த பாவத்துக்கும்
எல்லாப் பிழைகளுக்கும்
மன்னிப்பை யாருளும்.

3. பிசாசின் மூர்க்கத்துக்கும்
எல்ப்பாவங்களுக்கும்
திடீரென வரும்
துர்ச்சாவின் கைக்குமே
நீர் என்னை நீங்கலாக
இந்நாளும் காப்பீராக,
அன்புள்ள கர்த்தரே.

4. என் தேகம் ஆத்துமாவும்
அடுத்திருக்ற
ஜனத்தின் கூட்டம் யாவும்,
என் ஜீவன் என் எல்லா
இருப்பும் வேலையும்
சுகமும் சீருமாக
இருக்கிறதற்காக
நீரே ரசிக்கவும்.

5. மகா பொல்லாங்கனான
பிசாசு தனது
விஷமுங் கேடுமான
வினையால் எனக்குப்
பொல்லாப்பு ஒன்றையும்
செய்யாதிருப்பதற்கு,
பரத்தின் தூதருக்கு
நீர் கட்டளையிடும்.

6. சருவத்திற்கும் வல்ல
ஆண்டவருடைய
குறைவில்லாத நல்ல
விசாரிப்புக்கெல்லா
விசாரங்களையும்
நான் ஒப்புவிப்பேனாக;
அப்போதெல்லாம் நன்றாகத்
தன் லக்குக்கு வரும்.

7. இப்போ சந்தேகமற
நான் ஆமென் என்கிறேன்,
நான் வேண்டினதைத் தர
தவறீர், அறிவேன்.
இனி நான் உம்மையே
முன்னிட்டு உண்மையாக
என் வேலை செய்வேனாக,
துணை நீர் கர்த்தரே.

Georg Niege, † 1588.