224. ஒளியாம் இயேசுவே, ராச்

1. ஒளியாம் இயேசுவே,
ராச் சென்றபின் இப்போது
அருளின் பொழுது
புதுப் ப்ரகாசத்தோடு
என்மேல் உதித்தது,
நித்திரை விட்டு நான்
உம்மிடம் சேர்வதே
என் நெஞ்சின் வாஞ்சைதான்.

2. கர்த்தாவே, உமக்கு
அடியேன் பலியாக
எதைச் செலுத்துவேன்.
நான் விசுவாசமாக
உமது அருளில்
அமிழ்ந்து போவதே
நான் இடும் பலிதான்
வேறொன்றறியேனே.

3. என் ஆத்துமத்தையே
உமக்குச் சொந்தமாக
நான் ஒப்படைக்கிறேன்.
அதை நீர் தயவாக
மணம் புரிந்தன்பாய்
சுத்திகரிக்கவும்
உமது ஆவியால்
ப்ரகாசிப்பிக்கவும்.

4. அத்தோடென் தேகத்தை
நான் உமக்கு வீடாக
ப்ரதிஷ்டை செய்கிறேன்
நல்லாலயமுமாக.
உம்மால், என் ஜீவனே,
நான் இந்த நாளிலும்
பிழைத்துழைக்கவே
என்னில் நிலைத்திரும்.

5. சரீரத்துக் கிப்போ
நான் உடையைத் தரித்தேன்
என் ஆத்துமத்தையோ
எத்தால் அலங்கரிப்பேன்
நான் தெய்வச் சாயலாய்
எப்போதும் வாழவே
உமது நீதிதான்
சிறந்த ஆடையே,

6, என் இயேசு, ஞானத்தால்
அன்பாலும் கற்பினாலும்
என்னை நிரப்புமேன்,
பொறுமை தாழ்மையாலும்
நீர் என்னை ஜோடியும்.
இந்நற்குணமெல்லாம்
என் ஆத்துமத்திற்கு
நல் அலங்காரமாம்.

7. எங்கும் நிறைந்த நீர்
உள்ளும் புறம்புமாக
என்னை அறிகிறீர்,
நான் சாக்கிரதையாக
நடந்து, உம்மையே
எந் நிமிஷத்திலும்
நினைத்துத் தொழவே
சகாயராயிரும்.

8. நான் செய்யும் வேலையை
ஆசீர்வதித்து வந்து,
என் பலவீனத்தில்
நீரே நற்பலந் தந்து
நான் உமக்கேற்றதாய்
எல்லாம் முடிக்கவும்
உம்மில் நிலைக்கவும்
துணை செய்தருளும்.

Joachim Lange, † 1744.