225. இருட்டு வந்தால் இந்நாள்

1. இருட்டு வந்தால் இந்நாள்
முடிந்து போகவே,
சிருஷ்டி யாவுங் களைப்பால்
தூங்கி அமருமே.

2. நீரோ, விழித்திருக்கிற
கர்த்தர், நீர் ஒருவர்
இருளும் தூக்கமுமில்லா
வெளிச்சமானவர்.

3. கர்த்தாவே, என்னைத் தயவாய்
நீர் இந்த ராவிலும்
நினைத்து, என் தகப்பனாய்க்
காப்பாற்றியாருளும்.

4. நற்றூதரால் பேயுடைய
சதிகளை எல்லாம்
விலக்குமேன், பயமற
அப்போ நான் தூங்கலாம்.

5. மெய்தானே, என்னில் பாவத்தால்
மனங் கலங்குமே,
ஆனாலும் இயேசுவின் அன்பால்
என் குற்றம் நீங்கிற்றே.

6. ஞாய ஸ்தலத்தில் அவரே
அடியேனின் பிணை
மன்னிப்படைவேன் என்பதே
அத்தால் என் நம்பிக்கை.

7. இத்தோடே தூங்கிப்போக நான்
என் கண்ணைமூடுவேன்,
என் காவல்காரர் கர்த்தர்தான்,
நான் துக்கமாயிரேன்.

8. அகன்றுபோய் விலகுகங்கள்,
வீண் நினைவுகளே;
கர்த்தாவுக் கென்னைப் பிள்ளைபோல்
நான் ஒப்புவித்தேனே.

9. என் ஜீவன் இந்த ராவிலே
முடிந்த போதிலும்,
என் ஆவியை உம்மண்டையே
அன்பாய்ச் சேர்த்தருளும்.

10. பிழைத்தும் செத்தும், கர்த்தரே,
நான் உம்முடையவன்;
எது நேர்ந்தும் கேடில்லையே,
நீர் என் பராபரன்.

V. 1: Krieger, † 1666.