230. வெளியில் ஊரில் யாவும்

1. வெளியில் ஊரில் யாவும்
எல்லாஜீ வாத்துமாவும்
இப்போதமர்ந்தது;
என் மனமே, நீ பாடி,
உன் கர்த்தரைக் கொண்டாடி
ஜெபத் தியானமாயிரு.

2. பகலோன் அஸ்தமித்து
ரா வந்ததால் ஒளிந்து,
காணாமல் போயிற்று;
போகட்டும்; இயேசுவான
பகலோன் என்ற ஞான
வெளிச்சமே என் பூரிப்பு.

3. பகல் முடிந்த பின்னும்
நட்சத்திரங்கள் மின்னும்
விண் மண்டலத்திலே
எந்நாளின் வேலையான
பிற்பாடவ்வண்ணமான
சிங்காரம் தாரும், கர்த்தரே.

4. என் சிறுமை இருப்பை
காண்பிக்கிற உடுப்பை
இப்போ களைக்கிறேன்;
அதற்குப் பதிலாக
அந்நாளிலே நன்றாக
அலங்கரிக்கப்படுவேன்.

5. இந்நாளின் வேலையாலும்
தலையுங் கையுங் காலும்
சலித்துப் போயிற்று;
இனியோ எந்தப் பாடும்
எப்பாவக்கேடும் மாறும்,
என் மனமே, மகிழ்ந்திரு.

6. இப்போதுஞ் சுகமான
பாடுத்துக் கொள்வாயாக
இளைத்த தேகமே;
ஆயாசமெல்லாம் ஆற,
இனிப்படுக்கைத் தாழ;
அகப்படும் குழியிலே.

7. உறக்கத்தால் கண்மூடும்,
இருட்டும் என்னைச் சூழும்
நீரோ என் ஸ்வாமியே,
என் ஆவி தேகத்துக்கும்
சதிவராதிருக்கும்
படிக்கென்னைத் தற்காப்பீரே

8. இக்குஞ்சைப் பட்சமாக
அரவணைப்பீராக
அன்புள்ள இயேசுவே;
பேய் தந்திரம் வீணாக
நற்றூதர் காவலாக
இருக்கப்பண்ணும் கர்க்தரே.

9. அடுத்தவர்கள் மீதும்
இராவில் கேடுந் தீதும்
வராமல் யாவரும்
அருள் நிழலின் கீழே
சுகித்துத் தூங்க, நீரே
அன்பாகக் கட்டளையிடும்.

P.Gerhardt, † 1676