229. வெளிச்சமான இயேசுவே, இருளை

1. வெளிச்சமான இயேசுவே,
இருளை நீக்கும் பொழுதே,
அடியாருக்குதித்த நீர்
வெளிச்சத்துக் கழைக்கிறீர்.

2. பேய் இந்த ராவில் எங்களைத்
தொடாப்படிக்கடியாரைக்
காப்பாற்றி, உம்மண்டையிலே
சேர்த்தாதரியும், கர்த்தரே

3. கண் தூங்குகையில், நெஞ்சை நீர்
தூங்காதே காக்கக்கடவீர்;
அடியார் பாவமின்றியே
இருக்கப்பண்ணும், இயேசுவே

4. கெர்ச்சிக்கும் சிங்கம்போலே பேய்
பொல்லாபுச் செய்யப் பார்க்குமே
அதின் சதியனைத்தையும்
நீரே வீணாக்கியருளும்.

5. அடியார் நீர் உம்முடைய
இரத்தத்தால் சம்பாதித்த
ஜனமும் உமக்கென்றைக்கும்
பிதா கொடுத்த சொந்தமும்.

6. நாற்றுதர் எங்களை அன்பாய்
பிசாசுக்கு விலக்கமாய்
காத்தெங்கள் கிட்ட சுற்றிலும்
இறங்கக் கட்டளையிடும்

7.  அவ்விதமாய்ப் பயப்படோம்
நற்சுகமாகத் தூங்குவோம்.
த்ரியேகரான உமக்குத்
தோத்திரமே உண்டாகுது.

krasmus Alberus, † 1553.