232. நித்திரை செய்யாமல், ஆட்டைத்

1. நித்திரை செய்யாமல்,
ஆட்டைத் தீங்கில்லாமல்
காக்கும் மேய்ப்பரே,
என்னையும் கடந்த
பகலில் அனந்த
அன்பாய்க் காத்தீரே,
ராவிலும் பார்த்தருளும்,
தேவதூதர் காவலையும்
என்னைன்டையில் வையும்.

2. தீயோர் வர்மத்துக்கும்
விலகும் ஒதுக்கு
என் பிதா தயை;
நான் கிலேசமற
தூங்கி ஓய்ந்தமர
என் பாவங்களை
உமது சுதனது
ஐந்துகாயம் பார்த்தன்பாக
நீர் மன்னிப்பீராக.

3. வீட்டார் நேசரையும்
தயவாய் மறையும்
எல்லாத் தீங்குக்கும்
எங்களை அன்பாலே
உமது கையாலே
காத்தணைத்திடும்.
உம்மில் நான் என்னில் நீர்தான்
தங்கும்போ தமர்ந்திருப்பேன்,
சுகமாய்ப் படுப்பேன்.

4. நான் பயப்படாமல்
சஞ்சலமில்லாமல்
இளைப்பாற நீர்
என் அறையைப் பூட்டும்,
இந்தக் குஞ்சைக் கூட்டும்
தேவ செட்டைக் கீழ்;
அப்போதான் என்னைச் சாத்தான்
பீரத்தேடியும், அடியேன்
அஞ்சித் தத்தளியேன்.

5. அடியேனை இன்று
படுக்கையினின்று
நீர் அழைப்பீரோ.
தேவரீரின் சித்தம்
நல்லதென்று நித்தம்
சொல்லுவேன், இதோ,
இப்போதே, என் மீட்பரே,
உம்மண்டை வழி நட்த்தும்
மரணம் வரட்டும்.

6. நித்திரைக்கிப்போது
நான் சந்தோஷத்தோடு
கண்ணை மூடுவேன்.
உமக் காவியையும்
தேகம் உயிரையும்
ஒப்புவிக்கிறேன்.
தேவரீர் நான் பிழைத்தால் நீரே
பாதுகாத்தாள்வீரே.

Benj. Schmolk, † 1737.