1. இளைப்பாறப்போகிறேன்,
கண்ணைமூடித் தூங்குவேன்
என் பிதாவின் கண்மணி
என்னைக் காக்கவும் இனி.
2. இன்று செய்த பாவத்தை
நினையாமல், நீர் அதைக்
கிறிஸ்தின் ரத்தம் சாவையும்
பார்த்தன்பாக மன்னியும்.
3. இனத்தாரை உமக்கே
கையளிப்பேன், கர்த்தரே
பாலர் பெரியோரைம்
நீர் காப்பாற்றியருளும்.
4. துக்கம் நோய் உற்றோர்களும்
நன்றாய் ஓய்ந்து தூங்கவும்
தூதர் காவல் தாருமேன்,
அப்போநன்றாய்த் தூங்குவேன்.
Louise Hensel, † 1876.