238. இப்போது இயேசு நாமத்தில்

1. இப்போது இயேசு நாமத்தில்
நான் போகிறேன் கர்த்தாவே,
போகும்போது என்னண்டையில்
இருப்பீரே, பிதாவே.
என் தேகம் ஆவி யாவையும்
என் காரியத்தைக் கூடவும்
நான் உமக்கொப்புவிப்பேன்.

2. வழியில் என்னை மோசங்கள்
சுற்றாதிருப்பதில்லை;
மெய்யான இளைப்பாறுதல்
புவியில் எனக்கில்லை;
நான் இங்கும் அங்கும் வேலையாய்
நிலையில்லாதவனுமாய்
நடக்கும் பரதேசி.

3. ஆனாலும் என் சகாயர் நீர்,
நான் என் சுமையின் கீழே
விழாப்படிக்குத் தேவரீர்
தினம் ரட்சிக்கிறீரே;
பிற்பாடு மோட்சஊரிலே
உம்மண்டை முடிவின்றியே
நான் வாழ்வேனே, கர்த்தாவே

4. என் பயணத்தில் அவ்விட
நினைப்பால் என்னை ஆற்றும்,
அவ்வூருக்கும் நேராகிய
வழியையே நீர் காட்டும்;
கை தந்தழையும், கர்த்தரே,
அடியேனுக் கன்புடனே
நீர் ஆசீர்வாதம் தாரும்.

5. என் உத்தியோகத்தின்படி
இப்போதென் வீட்டை விட்டு
போகையில் காரும்; அவதி
அணுகினால், ரட்சித்து,
நான் போகும் கவைவாய்த்திட
சுகமுமாய் நான் போய் வர
ஒத்தாசை செய்யும், ஸ்வாமி.

6. நான் விட்டுப் போகும் எனது
வீட்டாரைத் தயவாக
நீர் இதற்குள்ளே தீங்குக்கும்
விலக்கிக் காப்பீராக,
திரும்பிவந்தவர்களைச்
சீராகக் காணும் பூரிப்பை
அடியேனுக் குண்டாக்கும்.

7. நான் செய்யப்போகும் வேலையில்
நல்லெச்சரிக்கையாக
இருந்து தக்க ஞானமாக
நடத்தும் யோசனைகளை
அடைய, உமதாவியை
அடியேனுக்களியும்.

8. நீர் உம்முடைய தூதரை
என்னோடே தயவாக
அனுப்பி, விக்கினங்களைப்
பரிகரிப்பீராக;
பொல்லா மனிதருடைய
வினைகளால் உண்டாகிய
சதிகளை அகற்றும்.

9. பிதாவே, நீர் என் சலுகை,
நீரே இரக்கமாக
எந்நேரமும் அடியேனை
நடத்திக் காப்பீராக.
எந்நாளும் என் வருத்தமும்
முடிந்தபின் நீர் என்றைக்கும்
அங்கென்னை வாழப்பண்ணும்.

Just. Gesenius, † 1673.