1. இப்போ படி அளந்த
கர்த்தாவை அவர் தந்த
நல்லீவுகளுக்காக
நாம் தோத்திரிப்போமாக.
2. மண்ணாஞ் சரீரத்துக்கும்
சரீர ஜீவனுக்கும்
பிழைப்பை அவர் தந்தார்,
பராமரித்து வந்தார்.
3. திவ்விய வார்த்தையாலும்
நல் முத்திரைகளாலும்
தேவாவியார் அளிக்கும்
ஈவாலுஞ் சீர் பலிக்கும்.
4. நாம் இயேசுவால் மன்னிப்பும்
குறைவில்லா ரட்சிப்பும்
அடைந்ததால் கெலிப்போம்,
ரட்சித்தோரைத் துதிப்போம்.
5. ஆ, எங்களை முடிய
நீர் உமது திவ்விய
இரக்கத்தால் காப்பாற்றும்,
உபத்ரவத்தால் ஆற்றும்.
6. மெய் எங்களில் தரிக்க
அத்தால் நற்சீர் வர்த்திக்க
நீர் இயேசு ஸ்வாமிக்காக
சகாயஞ் செய்வீராக.
Ludwig Helmbold, † 1598